தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் TNPSC ஆணையத்தின் மூலம் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறநிலையத்துறை துணை சேவை அமைப்பில்  ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Executive Officer Grade III பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 


காலிப்பணியிட விவரம்:


Executive Officer Grade III பணிக்கு என மொத்தமாக 42 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையத்தில் Arts / Science / Commerce போன்ற பிரிவின் கீழ் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தினத்தின்படி கட்டாயம் 25 வயது பூர்த்தியடைந்தவராக இருப்பது அவசியம்.


மேலும் அதிகபட்ச வயதானது, SCs, SC(A)s, STs, MBC / DCs, BCs & Destitute Widows of all Castes ஆகிய வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கிடையாது என்றும், இவர்களை தவிர மற்ற வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 37 வயது எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:


இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு Level-10 என்கிற அரசு ஊதிய அளவின்படி குறைந்தது ரூ.20,600 முதல் அதிகபட்சம் ரூ.75,900வரை மாத ஊதியம் வழங்கப்படும். 


தேர்வு செயல்முறை:


கீழுள்ள தேர்வு செயல் முறைகளின் வாயிலாக Executive Officer Grade III பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் படிக்க | இந்த நாளில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக், வங்கிச் சேவைகள் பாதிக்கும் அபாயம்


எழுத்து தேர்வு (Written Examination)
சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate verification)
கலந்தாய்வு (Counselling)


பதிவு கட்டணம்:


விண்ணப்பதாரர்களுக்கு பதிவு கட்டணமாக (One Time Registration) ரூ.150/- செலுத்த வேண்டு.


தேர்வு கட்டணம்:


தேர்வு கட்டணமாக ரூ.100/- மட்டும் செலுத்த வேண்டி இருக்கும் என்று அறிவித்துள்ளது.


விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூன் 17ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், Paper-I தேர்வானது 10.09.2022 (9.30 A.M to 12.30 P.M) நடக்கும் எனவும்,  Paper – II தேர்வானது 10.09.2022 (02.00 P.M. to 05.00 P.M) நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த இணைப்புக்கு சென்று ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று அதனை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை அத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவும். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR