அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Lab Technician, Driver, Ward Assistant, Hospital Worker, Vehicle Pusher, Sanitary Worker பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Lab Technician, Driver, Ward Assistant, Hospital Worker, Vehicle Pusher, Sanitary Worker பணிக்கென மொத்தம் 81 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,
Lab Technician – 34 பணியிடங்கள்
Driver – 2 பணியிடங்கள்
Ward Assistant – 8 பணியிடங்கள்
Hospital Worker – 12 பணியிடங்கள்
Vehicle Pusher – 6 பணியிடங்கள்
Sanitary Worker – 19 பணியிடங்கள் என்ற விகிதத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 45 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் நவம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | NTPC Jobs: வேலை தேடும் எஞ்சினியர்களுக்கு அருமையான அரசு வேலை! என்டிபிசியில் பணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ