இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வங்கியானது நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, விருதுநகர், கரூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் காலியாக உள்ள ஆசிரியர், அலுவலக உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்:
Faculty – 7 பணியிடங்கள்
Office Assistant – 8 பணியிடங்கள்
Attender – 6 பணியிடங்கள் என மொத்தம் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
IOB அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 10ஆவது, 12ஆவது, பட்டப்படிப்பு, BA, B.Com, B.Sc, BSW, B.Ed, MA, முதுகலை பட்டப்படிப்பு என ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
அதாவது,
Faculty – Graduation, BA, B.Sc, B.Ed, MA, Post Graduation
Office Assistant – Graduation, BSW, BA, B.Com
Attender – 10 அல்லது 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
Faculty – ரூ.20,000
Office Assistant – ரூ.12,000
Attender – ரூ.8,000
வயது வரம்பு:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 22 வயது மற்றும் அதிகபட்சம் 40 வயதுடையவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ரூ. 200 செலுத்த வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை:
Written Test
Demonstration
presentation
Personal Interview
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், தலைமை மேலாளர், நிதிச் சேர்கை துறை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம் எண். 763, அண்ணாசாலை, சென்னை – 600002 என்ற முகவரிக்கு நவம்பர் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ அதிகரிப்பைத் தொடர்ந்து இதுவும் உயரும், பம்பர் ஊதிய ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ