இளைஞர்கள் பலருக்கு அரசு வேலை மீது எப்போதும் ஒரு பார்வை இருக்கும். அதிலும் மத்திய அரசு வேலைக்கு தொடர்ந்து பலர் முயன்றுகொண்டே இருக்கிறார்கள். அப்படி முயன்றுகொண்டிருப்பவர்களுக்காக மத்திய அரசு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி,  Digital Content Developer, Graphic Artist பணியிடங்களை நிரப்ப தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது.


மேலும் படிக்க | GST Update: சாமானியர்களுக்கு அதிர்ச்சி! ஜூலை 18 முதல் பல பொருட்கள், சேவைகளின் விலைகளில் ஏற்றம்


இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதன்  மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


காலிப் பணியிட விவரம்:


Digital Content Developer – 2 பணியிடங்கள்
Graphic Artist – 2 பணியிடங்கள் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன


கல்வித் தகுதி:


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BCA, B.Sc, BFA, M.Sc, MCA, MFA படித்திருக்க வேண்டும்.


மேலும் படிக்க | அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா - உடனே இதை செய்யுங்கள்


தேர்வு செய்யப்படும் முறை:


தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.


ஊதிய விவரம்:


நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.29,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://ncert.nic.in/pdf/announcement/vacancies/projectstaffvacancy/cncl_7722.pdf என்ற இணையதள முகவரி மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்துகொண்டு, 01.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | SEBI Recruitment 2022: செபியில் வேலைவாய்ப்பு: முதுகலை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ