தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project & Teaching Assistant, JRF, Contractual Engineers ஆகிய பதவிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காலிப் பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், Project & Teaching Assistant, JRF, Contractual Engineers பதவிக்கு என மொத்தமாக 9 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது,
Project Assistant – 2
Project Associate – 2
Teaching Assistant – 2
Contractual Engineers – 2
Junior Research Fellow – 1 என்ற எண்ணிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதிகள்:
Junior Research Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Agriculture/ Horticulture பாடப்பிரிவில் B.Sc டிகிரி அல்லது Biotechnology பாடப்பிரிவில் BE / B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல், Teaching Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Veterinary Sciences பாடப்பிரிவில் முதுகலை பட்டமோ அல்லது முனைவோர் பட்டமே பெற்றிருக்க வேண்டும்.
மேலும் படிக்க | Credit Card கடன்களால் முழி பிதுங்குதா: தொகையை திருப்பிச்செலுத்த எளிய டிப்ஸ் இதோ
Project Associate பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Forestry / Sericulture / Agricultural பாடப்பிரிவில் முனைவோர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
Project Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Forestry / Sericulture / Agriculture பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Contractual Engineers பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Agricultural Engineering பாடப்பிரிவில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
ஊதிய விவரம்:
Teaching Assistant பணிக்கு PG With NET – ரூ.40,000/- , PG Without NET ரூ.36,000/- மற்றும் Doctoral With NET – ரூ.49,000/-, Doctoral Without NET ரூ.40,000/- வரை தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும்.
Junior Research Fellow பணிக்கு ரூ.20,000/- வழங்கப்படும்.
Project Associate பணிக்கு ரூ.49,000/- வழங்கப்படும்.
Project Assistant பணிக்கு ரூ. 31,000/- வழங்கப்படும்.
Contractual Engineers பணிக்கு ரூ.20,000/- வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணலானது பணிக்கு ஏற்றாற்போல் Contractual Engineers பணிக்கு 23.06.2022 ம் தேதி என்றும், மற்ற அனைத்து பணிகளுக்கும் 13.06.2022ஆம் தேதி அன்றும் நேர்காணல் நடக்கும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை தயார் செய்து நேரடியாக நேர்காணலின் போது கொண்டு சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe