Credit Card கடன்களால் முழி பிதுங்குதா: தொகையை திருப்பிச்செலுத்த எளிய டிப்ஸ் இதோ

Credit Card easy debt repay Tips: கொரோனா தொற்றுநோய்களின் போது, ​​​​பலர் திடீரென்று தங்கள் வேலைகளை இழந்தனர். அப்போது கிரெடிட் கார்ட் கடன்களில் மாட்டிக்கொண்ட பலரை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 11, 2022, 05:08 PM IST
  • கிரெடிட் கார்டு கடன்களை எளிதாக திருப்பிச் செலுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்.
  • வங்கி அல்லது நிறுவனத்துடன் கடன் பற்றி பேசுங்கள்.
  • தொகையை திருப்பிச் செலுத்தும் உத்தியை உருவாக்குங்கள்.
Credit Card கடன்களால் முழி பிதுங்குதா: தொகையை திருப்பிச்செலுத்த எளிய டிப்ஸ் இதோ title=

கிரெடிட் கார்டு கடன்களை எளிதாக திருப்பிச் செலுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்: கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவில்லை என்றால், அது உங்களை பெரும் கடன் வலையில் சிக்க வைக்கும். பல சமயங்களில் நாம் விரும்பினாலும், கிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய தொகையை நம்மால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. 

கொரோனா தொற்றுநோய்களின் போது, ​​​​பலர் திடீரென்று தங்கள் வேலைகளை இழந்தனர். அப்போது கிரெடிட் கார்ட் கடன்களில் மாட்டிக்கொண்ட பலரை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஏதேனும் காரணத்தால் கிரெடிட் கார்டு கடனில் சிக்கிக் கொண்டால், பயப்பட வேண்டாம். அதிலிருந்து மீள எளிய வழிகள் உள்ளன. அப்படிப்பட்ட 4 முறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

தொகையை திருப்பிச் செலுத்தும் உத்தியை உருவாக்கவும்

கிரெடிட் கார்டு கடனில் இருந்து விடுபட, நீங்கள் தொகையை திருப்பிச் செலுத்தும் இலக்கையும் அதற்கான உத்தியையும் உருவாக்க வேண்டும். இதில் நான்கு விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலில், உங்கள் சேமிப்பு அதிகமாக இருந்தால், செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை விட அதிகமாக செலுத்துங்கள். இது உங்கள் வட்டியை குறைக்கும். 

இரண்டாவது டெப்ட் ஸ்லோபால் முறை. இதன் பொருள் நீங்கள் முதலில் சிறிய கடன்களை திரும்பி செலுத்த வேண்டும். இதன் மூலம், சிறிது காலத்திற்குப் பிறகு, பெரிய கடனைத் திருப்பிச் செலுத்த போதுமான அளவு தொகை உங்களிடம் இருக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை 1 முதல் 39% டிஏ, பம்பர் ஊதிய ஏற்றம், முழு கணக்கீடு இதோ 

வங்கி அல்லது நிறுவனத்துடன் பேசுங்கள்

கிரெடிட் கார்டு கடனில் இருந்து விடுபடுவதற்கான ஒரு வழி, செயலூக்கமான அணுகுமுறையை மேற்கொள்வதாகும். உங்கள் கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி அல்லது நிறுவனத்துடன் நீங்கள் தொகையை திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளில் எவ்வளவு தள்ளுபடி பெறலாம் என்பதைப் பற்றி பேசுங்கள். நிலுவை பில் அதிகமாக இருந்தால், பெரும்பாலான வங்கிகள் அதற்கு வழிவகை செய்கின்றன.

கடனை ஒரே கணக்கில் கொண்டு வரவும்

ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளின் தொகையை செலுத்த வேண்டியிருந்தால், கடனை ஒருங்கிணைப்பது சிறந்தது. அதாவது, அனைத்து கிரெடிட் கார்டு கட்டணங்களையும் ஒரே கணக்கில் சேர்க்க முடியும். தனித்தனியாக பணம் செலுத்துவதற்குப் பதிலாக நீங்கள் ஒரே பேமெண்டில் கடனை திருப்பி செலுத்தலாம்.

செலவுகளை குறைக்கிறது

கிரெடிட் கார்டு கடன் உங்களை பாதிக்கக்கூடும். எனவே அத்தகைய நேரத்தில் உங்கள் செலவுகளை குறைக்க வேண்டும். உங்களுக்கு சம்பளம் கிடைத்தவுடன், முதலில் கிரெடிட் கார்டு கடனின் நிலுவைத் தொகையைக் கட்ட முயற்சிக்கவும். அதன் பிறகு மீதமுள்ள தொகையில் அந்த மாத வரவு செலவு கணக்கை திட்டமிடவும். செலவுகளுக்கு முன் கடன் நிலுவைத் தொகையை செலுத்தும் உத்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் மேம்படுத்தும். 

(பொறுப்புத் குறிப்பு: நிதி சேவைகள் நிறுவனத்தின் வலைப்பதிவு இடுகையின் அடிப்படையில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது)

மேலும் படிக்க | Investment Tips: இந்த தவறுகளை தவிர்த்தால் கை நிறைய லாபம் காணலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News