அஞ்சல் துறையில் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
தமிழ்நாடு தபால் அலுவலகத்தில் தற்போது Staff Car Driver பணியிடம் திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் காலியாக உள்ளது.
தமிழ்நாடு தபால் அலுவலகம் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போவதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் Staff Car Driver பணி காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர் 17.5.2022 கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | LIC Assistant 2022: எல்.ஐ.சியில் வேலை வேண்டுமா: உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தகுதி:
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் (Driving License) கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
இலகுரக மற்றும் கனரக (Light and heavy Motor Cycle) வாகனங்கள் ஓட்டுவதில் முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
வயது:
8 வயது முதல் 56 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை உயர்த்தியது LIC HFL!
தேர்வு செய்யப்படும் முறை:
Merit List
Certificate Verification
விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சரியாக இணைத்து The Senior Manager, Mail Motor Service, Tallakulam, Madurai 625 002 என்ற முகவரிக்குள் 17ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் சரியான ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR