சென்னை மாவட்ட தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையானது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் காலியாக உள்ள ஓதுவார் பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 20.09.2022 அன்றுவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலி பணியிடங்கள்:


ஓதுவார் பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் காலியாக உள்ளது.


ஓதுவார் பணி பற்றிய விவரங்கள்:


தமிழ் மொழியில் நன்கு எழுத மற்றும் படிக்க தெரிந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் சமயம் அல்லது அரசு கல்வி நிறுவனங்களில் 3 ஆண்டு காலம் தேவாரம் பாடுவதில் பயிற்சி பெற்ற சான்றிதழ் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.


மேலும் படிக்க | CBI-ல் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்!


விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.08.2022 அன்றைய நாளின்படி, குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 35 வயது எனவும் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஓதுவார் பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு பணியின்போது Pay Matrix 22 என்ற ஊதிய அளவின்படி குறைந்தபட்சம் ரூ.18,500 முதல் அதிகபட்சம் ரூ.58,600வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை:


 விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் வழிமுறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் https://drive.google.com/file/d/1RGwgVzTdcb7GSaW9w05fUvX88K-CCtsy/view என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து  துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை – 26 என்ற முகவரிக்கு அடுத்தம் மாதம் 20ஆம் தேதிக்குள் தபால் செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | இந்த அஞ்சலக திட்டத்தின் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம்! முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ