பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தேர்வு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபா அணு ஆராய்ச்சி மையமானது Pharmacists, Nurse பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Pharmacists பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் மற்றும் Nurse பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிட விவரம்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Pharmacists, Nurse பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது,
Pharmacists – 4 பணியிடங்கள்
Nurse – பல்வேறு பணியிடங்கள்
கல்வித் தகுதி:
Pharmacists பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | PAN Card தொலைந்துவிட்டதா? புதிய பான் கார்டை பெறுவது எப்படி? முழு செயல்முறை இதோ
Nurse பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in Nursing & Midwifery (3 years Course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
Pharmacists – ரூ.16,720
Nurse – ரூ. 24,234
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள், https://www.barc.gov.in/careers/vacancy28.pdf மற்றும் barc.gov.in/careers/vacancy27.pdf விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 18.10.2022 மற்றும் 19.10.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க | 5ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்; வருவாய்த் துறையில் வேலை வாய்ப்பு
மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: இந்த வசதியை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ