தீபத் திருநாள் என்பது கார்த்திகை மாத பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த பெருநாளாகும். அந்த நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும், கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி இறைவனை வழிபடுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவ்வகை சிறப்பு வாய்ந்த தீபத்திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த, 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருக்கார்த்திகையன்று காலையில் குளித்ததும், குலதெய்வத்தை மனதில் நினைத்து பூஜை செய்ய வேண்டும். 


சிவனுக்கும், முருகனுக்கும் உரிய பாடல்களைப் பாட வேண்டும். அன்று மாலை அண்ணாமலைக்கு அரோகரா, நமசிவாய, சிவாயநம, சரவணபவ ஆகிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். மாலை ஆறு மணிக்கு விளக்கேற்ற வேண்டும்.


இதையடுத்து, 10ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அதிகாலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


அப்போது,சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு, கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.


தீபம் ஏற்றப்படும்போது, பஞ்ச மூர்த்திகள் இணைந்து ஒன்றாக அமர்ந்து, தங்கக்கொடி மரம் முன் அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது வழக்கம்.