புதுடெல்லி: இன்று கார்த்திகை மாதம் பவுர்ணமி நாள். வெள்ளிக்கிழமை நாளன்று பவுர்ணமி வருவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் சிவபெருமானை வழிபட்டால், முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்,  முக்தியின் பாதை புலப்படும் என்பது நம்பிக்கை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம் மிக விஷேசமாக கொண்டாடப்படுவது வழக்கம். சிவ பெருமானின் பஞ்சபூத தளங்களில் அக்னித் தளமாக விளங்குவது திருவண்ணாமலை. இன்று திருவண்ணாமலையில் அகண்ட தீபம் ஏற்றப்படும். இது மகா தீபம் என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றியபிறகு, மக்கள் தங்களின் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து அண்ணாமலையானை வணங்குவார்கள்.  


கார்த்திகை மாதத்தின் வளர்பிறையின் முழு நிலவு நாள் கார்த்திகை பெளர்ணமி. இதை திரிபுராரி பவுர்ணமி என்றும் அழைக்கின்றனர். இன்று நாம் செய்யும் தானம் ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும் என்பதால், இன்று தானம் வழங்குவதற்கான நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. கார்த்திகை பவுர்ணமியன்று தான் கடவுள்கள் தீபாவளி கொண்டாடுவதாக கூறப்படுகிறது. ஆகவேதான் இது, தேவ தீபாவளி என்றும் அழைக்கப்படுகிறது.


ஒளி வடிவாக இறைவனை வழிபடும் நாளான கார்த்திகை பவுர்ணமியன்று (Karthik Purnima) தான், பிரம்மாவும், விஷ்ணுவும், ஐயன் சிவபெருமானின் அடி-முடி காணாமல் இவதும், இறைவனை தீபத்தின் வழியாக அழைப்பதாகும். தீபத்தின் ஒளியால் வீடு ஜொலிக்க விடுவது தான் கார்த்திகை தீபத்தின் சிறப்பு.


ALSO READ: Astrology: டிசம்பரில் இந்த ‘5’ ராசிக்காரர்கள் காட்டில் பணமழை தான்..!!


கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி தினத்தன்று, சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக காட்சி தந்த நாளை திருக்கார்த்திகை தீபமாக திருவண்ணாமலையில் மகா தீபமாக ஏற்றுவது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்.  


சிவபெருமானே மலை ரூபமாக அமைந்த திருவண்ணாமலையில் கோயில் கொண்டுள்ள திருவண்ணாமலையார் (Lord Shiva) நினைத்தாலே முக்தி அளிக்கக்கூடியவர். ஜோதி வடிவில் மலையே அக்னியாய் காட்சி தரும் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வது சிறப்பு. கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும் .


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகா தீபம் இன்று (நவம்பர் 19ம் தேதி, வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஏற்றப்படும். 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்து வந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனாப் பரவலின் அச்சம் காரணமாக முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது


ALSO READ: இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம்; இந்த ‘3’ ராசிக்காரர்களுக்கும் கவனம் தேவை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR