தினக்கூலி தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ .12 கோடி பரிசு
300 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கிய கேரள தொழிலாளிக்கு ரூ .12 கோடி பரிசு விழுந்துள்ளது.
ஒரு பழங்குடி தினசரி கூலி தொழிலாளி பி.ராஜன் (53) கடந்த மாதம் வங்கிக்குச் சென்று, தான் வாங்கிய மூன்று கடன்களுக்கான வட்டியை செலுத்திய பிறகு தனக்கு நான்காவது முறையாக கடன் வழங்க வேண்டும் என வங்கி மேலாளர் கேட்டுள்ளார். ஆனால் அவர் கடன் வழங்க முடியாது என்று கூறிவிட்டார். வருத்தத்துடன் வீட்டிற்கு திரும்பிய ராஜன் வழியில் ஒரு லாட்டரி சீட்டை (Lottery Tickets) வாங்கியுள்ளன். அவ்வப்போது அவர் லாட்டரி சீட் வாங்குவது பழக்கம். ஆனால் தனக்கு எல்லாம் லக் இல்லை என்றும் அவர் கவலைக்கொள்வது வழக்கம்.
ஆனால் அவருக்கு "லக்" வேலை செய்தது. கேரள மாநில லாட்டரியின் கிறிஸ்துமஸ் - புத்தாண்டு (Christmas-New Year) பம்பர் பரிசை வென்று ஏழை தொழிலாளி ஜாக்பாட்டை அடித்தார். இப்போது அவர் ரூ .12 கோடிக்கு பணக்காரர் ஆனார்.
லாட்டரியின் பரிசு முடிவு திங்களன்று நடந்தது. அதன்பிறகு மாநில லாட்டரி துறை, முதல் பரிசு பெற்ற லாட்டரி சீட் கண்ணூர் மாவட்ட கூத்துப்பரம்பாவில் உள்ள ஒரு கடையில் விற்கப்பட்டதை அடையாளம் கண்டது. ஆனால் பரிசு கோர யாரும் வராததால் ஒரு நாள் முழுவதும் சஸ்பென்ஸாக இருந்தது.
அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ராஜன் தனது டிக்கெட் எண்ணைக் குறித்து, தனது வீட்டின் அருகிலுள்ள ஒரு கடையின் சோதனைக்குச் சென்றார். அப்பொழுது அவரால் அவரது கண்களை நம்ப முடியவில்லை. அவரது டிக்கெட் எண் ST 269609 பம்பர் பரிசை 12 கோடி ரூபாய் வென்றது. இது மாநில லாட்டரி வரலாற்றில் மிக உயர்ந்த பரிசுத் தொகை ஆகும்.
இதுக்குறித்து பேசிய பி.ராஜன், "லாட்டரி சீட்டுகளை வாங்கும் பழக்கம் குறித்து அவரது மனைவி ரஜனி (Rajani) எப்போதும் அவருடன் சண்டையிடுவார் என்று அவர் கூறினார். ஆனால், இந்த முறை லாட்டரி சீட்டுக்காக ரூ .300 செலவு செய்தது, அவர்களின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றிவிட்டது.
நான் பரிசு வென்றதை என் மனைவி சொன்ன பிறகு, அவர் என்னை நம்பத் தயாராக இல்லை. நான் கேலி செய்கிறேன் என்று அவள் நினைத்தாள். மக்கள் என்னை வாழ்த்த வந்தபோதுதான் அவள் அதை உணர்ந்தாள்" என்றார் ராஜன்.
எனது முதல் கடமை ரூ .7 லட்சம் கடன்களை அடைக்க வேண்டும். அதன் பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள எனது வீட்டை கட்டி முடிக்க வேண்டும் என்றார்.