கேது பெயர்ச்சி 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும்போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு இது நன்மையையும் சில ராசிகளுக்கு தீமையையும் தரும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு கிரகத்தின் மாற்றத்தால், அதன் பலன் 12 ராசிகளிலும் காணப்படுகிறது. கேது ஒரு நிழல் கிரகம். வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கேதுவின் ராசி மாற்றம் நிகழப்போகிறது. ஒருவரது ஜாதகத்தில் கேது சஞ்சரிக்கும் இடத்திற்கு ஏற்றவாறு அந்த நபரின் பலன்கள் இருக்கும். 


கேதுவின் இந்த மாற்றம் மேஷ ராசிக்கு (Zodiac Signs) விசேஷமாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. கேதுவின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களை எப்படி பாதிக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 


இந்த மாற்றங்கள் வாழ்க்கையில் வரக்கூடும்


ஜோதிடத்தின் படி, மேஷ ராசிக்காரர்களின் ஆயுள் பாவத்தில் கேது சஞ்சரிப்பார். மேஷ ராசிக்காரர்கள் கேதுவின் இந்த சஞ்சாரத்தால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இது தவிர கேதுவின் சஞ்சாரத்தின் போது பல பிரச்சனைகள் வரக்கூடும். வேலை செய்யும் பாணியில் மாற்றம் ஏற்படும், உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப வெற்றி கிடைக்காது. உத்தியோகத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம்.


ALSO READ | சனியின் வக்ர நகர்வு: இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நெருக்கடி வரலாம் 


இந்த விஷயங்களை நினைவில் கொள்வது நல்லது


மேஷ (Aries) ராசிக்காரர்கள் கேது சஞ்சாரத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் கோபத்தையும் பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும். சிறிய விஷயங்களுக்கு சண்டை சச்சரவுகள் வரக்கூடும். கேதுவின் சஞ்சாரத்தின் போது வாழ்க்கைத்துணையின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் ஏற்கனவே ஏதேனும் உடல்நலப் பிரச்சனையை எதிர்கொண்டிருந்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளந. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


Also READ | முக்கிரக சேர்க்கையால் பலனடையும் 3 ராசிகள்! நீங்கள் எந்த ராசிக்காரர்? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR