சுக்ரனின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்: நீங்களும் இந்த ராசியா?

சுக்கிரனின் சஞ்சாரம் காரணமாக சில ராசிகளை சேர்ந்தவர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். இவர்களின் நிதி நிலையும் மேம்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 22, 2022, 07:22 PM IST
  • ஆடம்பர வாழ்க்கைக்கு காரணமான சுக்கிரன் ராசியை மாற்றப் போகிறார்.
  • இந்த ராசி மாற்றம் ஜனவரி 29-ம் தேதி தனுசு ராசியில் நடக்கவுள்ளது.
  • சுக்கிரன் சஞ்சரிக்கும் காலத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சுக்ரனின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம்: நீங்களும் இந்த ராசியா? title=

கிரகங்களின் மாற்றங்கள் வெவ்வேறு ராசிகளில் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. 

ஆடம்பர வாழ்க்கைக்கு காரணமான சுக்கிரன் ராசியை மாற்றப் போகிறார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் ஜனவரி 29-ம் தேதி தனுசு ராசியில் நடக்கவுள்ளது. சுக்கிரனின் சஞ்சாரம் காரணமாக சில ராசிகளை சேர்ந்தவர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும். இவர்களின் நிதி நிலையும் மேம்படும். சுக்கிரனின் இந்த மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) பலன் அளிக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேஷம் 
சுக்கிரன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். தொழில், உத்தியோகத்தில் வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தில் தடைபட்டிருந்த பணிகள் முடிவடையும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம் 
சிம்ம (Leo) ராசிக்காரர்கள் சுக்கிரனின் சஞ்சாரத்தால் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இந்த காலத்தில் பொருளாதார முன்னேற்றம் இருக்கும். இது தவிர உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான பலன் கிடைக்கும். பிள்ளைகளால் பண ஆதாயம் உண்டாகும். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

ALSO READ | ராகு பெயர்ச்சியால் ராசி மாறும் ராசிக்காரர்கள்! நீங்கள் கும்ப ராசியா? இல்லை மிதுனமா? 

கன்னி 
குடும்ப உறுப்பினர்களால் நிதி ஆதாயம் ஏற்படும். பெற்றோரின் அன்பும் ஆசியும் கிடைக்கும். ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். காதல் துணையுடன் உறவு இனிமையாக இருக்கும். உத்யோகத்தில் பலமான பொருளாதார பலன்கள் ஏற்படும். கன்னி ராசிக்காரர்களுக்கு (Virgo) பணியிடத்தில் சம்பள உயர்வு இருக்கும். 

மிதுனம்
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். சுக்கிரனின் இந்த மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நகை வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். சமூக கௌரவம் அதிகரிக்கும்.

தனுசு

சுக்கிரன் சஞ்சரிக்கும் காலத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிதாக திருமணமானவர்களின் வாழ்க்கையில் காதல் மலரும். முதலீடுகளால் பொருளாதார லாபம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் துணையின் மீது முழு அன்பு அதிகரிக்கும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பண ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சிக்கான வழிகள் அதிகரிக்கும்.

ALSO READ | இந்த ராசிப்பெண்கள் அப்பாக்களின் செல்ல மகள்கள்: அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்கள்

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News