சனியின் வக்ர நகர்வு: இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நெருக்கடி வரலாம்

கிரகங்கள் நேரடியாக வாழ்க்கையுடன் தொடர்புடையவை. சனியின் வக்ர நகர்வு ஜூன் 5 முதல் தொடங்க உள்ளது. சனிபகவானின் இந்த நகர்வால் 4 ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2022, 05:25 PM IST
  • தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்
  • ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்
  • பணியிடத்தில் சிரமங்கள் வரும்
சனியின் வக்ர நகர்வு: இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நெருக்கடி வரலாம் title=

புதுடெல்லி: ஜோதிடத்தின்படி நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியதாக இருக்கும் சனி கிரகம். அதன்படி சனி பகவானின் வக்ர பெயர்ச்சியின் காரணமாக, எந்த ராசியெல்லாம் கெடுபலனை பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம். சனியின் வக்ர நகர்வு ஜூன் 5 முதல் தொடங்க உள்ளது. சனியின் வக்ர நகர்வு இந்த 4 ராசிக்காரர்களுக்கும் அதிக கெடுபலனை தரும். 

கடகம்: சனியின் வக்ர நகர்வு கடக ராசிக்காரர்களுக்கு(Zodiac Sign) சிறப்பான பலனைத் தரும். ஆனால் பணியிடத்தில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உண்மையில் கடக ராசியின் அதிபதி சந்திரன். சந்திரனுக்கும் சனிக்கும் பகையாளிகள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

ALSO READ | ஷ்ஷ்.. இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க 

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். கடன் பிரச்சனை உங்களைத் தொ தரும். உடல்நிலை மோசமாகலாம். அத்தகைய சூழ்நிலையில், உணவில் சிறப்பு கவனம் தேவை. இது தவிர, பணியிடத்தில் வெற்றி பெற பல வகையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். நிதி நிலைமை மோசமடையலாம். விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் மற்றும் சனி இடையே பகை உணர்வு உள்ளது. இதன் காரணமாக உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை.

மகரம்: மகர ராசிக்காரர்களும் சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். இது தவிர நண்பர்களாலும் பிரச்சனைகள் வரலாம். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் உங்களுக்கு தொல்லை தரலாம். இது தவிர, இலக்கை அடைவதில் தடைகள் ஏற்படும். கால் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

ALSO READ | பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News