PAN Card Update: இன்றைய காலகட்டத்தில் பான் கார்டு என்பது கட்டாய ஆவணமாக மாறிவிட்டது. இது இல்லாமல், எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது. ஒவ்வொரு நிதி பரிவர்த்தனையையும் செய்வதற்கும் வங்கியில் கணக்கு தொடங்குவதற்கும் பான் கார்டு அவசியம். வங்கி முதல் அலுவலகம் வரை, அது இல்லாமல் எந்த நிதிப் பணியையும் செய்ய முடியாது. ஆனால் பான் கார்டு தொடர்பான தவறு உங்களுக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு பான் கார்டுகள்; அபாரதம்


உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால் பெரிய அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல், உங்கள் வங்கிக் கணக்கும் முடக்கலாம். மேலும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், உடனடியாக உங்கள் இரண்டாவது பான் கார்டைத் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். வருமான வரிச் சட்டம் 1961ன் பிரிவு 272B-ல் இதற்கான ஏற்பாடு உள்ளது. நீங்கள் பான் கார்டை எப்படி ஒப்படைக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | Pan - Aadhar Link: மார்ச் கடைசிக்குள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்


2வது பான்கார்டை ஒப்படைக்கும் வழிமுறை


பான் எண்ணை ஒப்படைக்கும் செயல்முறை எளிதானது. இதற்கு ஒரு பொதுவான படிவம் உள்ளது, அதை நீங்கள் நிரப்ப வேண்டும்.  இதற்கு, நீங்கள் வருமான வரி இணையதளத்திற்குச் செல்லவும். இப்போது 'புதிய பான் கார்டு அல்லது/ மற்றும் பான் டேட்டாவில் மாற்றங்கள் அல்லது திருத்தத்திற்கான கோரிக்கை' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். அங்கிருந்து படிவத்தை பதிவிறக்கவும். அந்த படிவத்தை  பூர்த்தி செய்த பிறகு, ஏதேனும் NSDL அலுவலகத்திற்குச் சென்று சமர்ப்பிக்கவும். இரண்டாவது பான் கார்டைச் சமர்ப்பிக்கும் போது, ​​அதைப் படிவத்துடன் சமர்ப்பிக்கவும். இதை ஆன்லைனிலும் செய்யலாம்.


மேலும் படிக்க | PAN Aadhar Link: இவர்களெல்லாம் பான் கார்டு ஆதாருடன் இணைக்க தேவையில்லை...!


மேலும் படிக்க | ஆதார்-பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது?


மேலும் படிக்க | ஆதார் - பான் இணைப்பு: லட்சக்கணக்கானோருக்கு விலக்கு அளித்தது மத்திய அரசு..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ