Aadhaar Card Update: மொபைல் போனின் திருட்டு போதல் அல்லது வேறு சில காரணங்களுக்காக,  சிம் கார்டையும் இழக்கும் போது, புது  சிம் கார்டு  பெற வேண்டிய தேவை ஏற்படுகிறது. முன்னதாக, ஒரு புதிய சிம் வாங்குவதற்கு 2 முதல் 4 நாட்கள் ஆகும். ஆனால் இப்போது ஒரு புதிய சிம் கார்டை உடனடியாக ஆதார் அட்டையை வைத்து வங்கலாம் என்பதோடு கையோடு ஆக்டிவேட்டும் செய்யப்படுகிறது. ஆனால் ஒரு ஆதார் அட்டை மூலம் அதிகப்ட்சம் எத்தனை சிம்களை வாங்க முடியும்  என்பது தெரியுமா?  அதற்கான உச்ச  வரம்பு என்ன, என்பதை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI)  விதிகளின் படி, ஒரு ஆதார் அட்டை மூலம் 18 முறை சிம் கார்டுகளை வாங்கலாம் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக TRAI இன் விதிகளின்படி, ஒரு ஆதார் அட்டை மூலம்  ஒன்பது சிம் கார்டுகளை வாங்கலாம் என இருந்தது. ஆனால் பின்னர் அதன் இதன் வரம்பு இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டது. அதாவது, இப்போது 18 சிம் கார்டுகளை வாங்கலாம். வணிக தேவை அல்லது மக்களின் பிற தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வரம்பு, அதிகரிக்கப்பட்டுள்ளது.


மேலும் உங்கள் ஆதார் எண்ணுடன் (Aadhaar Card) எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். அது பாதுகாப்பானதும் கூட. உங்கள் ஆதார் எண் எங்கும் தவறாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை இதன் மூலம் உறுதி படுத்திக் கொள்ளலாம். 


ALSO READ: Vi Super Plan: BSNL, Jio-வை கலங்கடிக்கும் Vi 4GB தரவுத் திட்டம், எக்கச்சக்க நன்மைகள்


ஆதார் அட்டையுடன் எத்தனை எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை அறிய, உங்கள் மொபைல் எண் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படுவது அவசியம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது:


1. முதலில் நீங்கள் ஆதார், UIDAI  வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.


2. இப்போது முகப்பு பக்கத்தில் Get Aadhaar என்பதைக் கிளிக் செய்க.


3. இதற்குப் பிறகு Download Aadhaar என்பதைக் கிளிக் செய்க.


4. இப்போது அங்கே View More  ஆப்ஷனை தேர்வு செய்க


5. இப்போது Aadhaar Online Service சென்று Aadhaar Authentication History என்னும் ஆப்ஷனுக்கு செல்லுங்கள்.


6. இப்போது Where can a resident chech/ Aadhaar Authentication History  என்பதை தேர்ந்தெடுத்து அங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்க.


7. இப்போது ஒரு புதிய இண்டர்ஃபேஸ் உங்கள் முன் தோன்றும்.


8. இங்கே நீங்கள் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சாவை உள்ளிடவும். இப்போது உங்கள் எண்ணுக்கு OTP  பெற கிளிக் செய்க.


9. இப்போது Authentication Type என்பதில்  All  என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


10. நீங்கள் சரிபார்க்க விரும்பு தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.


11. இப்போது நீங்கள் எத்தனை பதிவுகளை பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை உள்ளிடவும். 


12. இப்போது நீங்கள் OTP ஐ உள்ளிட்டு சரிபார்ப்பு OTP ஐக் கிளிக் செய்க.


13. இதற்குப் பிறகு ஒரு புதிய இண்டர்பேஸ் உங்கள் முன் தோன்றும்.
இங்க்கே நீங்கள் உஙக்ள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி உள்ள விவரங்களைப் பெறலாம்.


ALSO READ: BSNL vs Jio: பிஎஸ்என்எல், ஜியோ போட்டி; எந்த பிளான் பெஸ்ட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR