April Fools Day: முட்டாள்கள் தினம் உருவான சுவாரஸ்ய கதை!
ஏப்ரல் 1 அன்று, முட்டாள்கள் தினம், அதாவது `April Fools Day` உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை மக்கள் தங்கள் நண்பர்கள், நெருங்கியவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை ஏமாற்றி கொண்டாடுகிறார்கள்.
April Fools Day: ஏப்ரல் 1 அன்று, முட்டாள்கள் தினம், அதாவது 'April Fools Day' உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை மக்கள் தங்கள் நண்பர்கள், நெருங்கியவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை ஏமாற்றி கொண்டாடுகிறார்கள். நாமெல்லாம் பள்ளிப் பருவத்தில், அன்று யாரிடமும் ஏமாறாமல் இருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்ட நாட்களை மறக்க முடியாது. அதேபோல யாராவது ஒருவரையாவது ஏமாற்றி விட வேண்டும் என்ற விளையாட்டுத்தனமும் கலந்த ஆர்வமும் எல்லோருக்கும் இருக்கும். உன் சட்டை என்ன கிழிஞ்சிருக்கு ?... ஐயையையோ காலுக்கு அடியில பாம்பு என நண்பர்களிடம் சொல்லி... ஏமாற்றி விளையாடும் நாள் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும். ஏமாற்றுவதையும் ஏமாறுவதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்ளும் ஒரு தினம் எனலாம்.
ஏப்ரல் ஃபூல் தினம் முன்னதாக இந்த நாள் பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்டது, ஆனால் படிப்படியாக ஏப்ரல் முட்டாள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடத் தொடங்கியது. ஏப்ரல் ஒன்று அன்று முட்டாள்கள் தினம் (April 1) கொண்டாடப்படுவதற்குப் பின்னால் பல கதைகள் பரவலாக உள்ளன. இந்த நாளின் வரலாற்றை தெரிந்து கொள்வோம்...
ஏப்ரல் முட்டாள்கள் தினம் தொடங்கிய கதை
ஏப்ரல் முட்டாள் தினம் ஏன் ஏப்ரல் 1 அன்று கொண்டாடப்படுகிறது என்பதற்கு உறுதியான சான்றுகள் இல்லை என்றாலும், அது பற்றி பல கதைகள் பரவலாக உள்ளன. அதில் ஒன்றின் படி, ஏப்ரல் முட்டாள் தினம் 1381 இல் தொடங்கியது. அந்த நேரத்தில் கிங் ரிச்சர்ட் வெற்றி பெற்ற நிலையில், போஹேமியா ராணி அன்னே அவர்கள் மார்ச் 32, 1381 இல் நிச்சயதார்த்தம் செய்யப் போவதாக அறிவித்தார். நிச்சயதார்த்தம் பற்றிய செய்தியைக் கேட்டு, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர், ஆனால் மார்ச் 31, 1381 அன்று, மார்ச் 32 வருவதில்லை என்பதை மக்கள் புரிந்துகொண்டனர். இதன் பின்னரே தாங்கள் ஏமாந்து விட்டதாக மக்கள் புரிந்து கொண்டனர். அன்று முதல் மார்ச் 32ஆம் தேதி அதாவது ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | உயிருடன் எரிக்கப்பட்ட 1,60,000 பேர்; கால் வைக்கும் இடமெல்லாம் மனித எலும்புகள்!
'ஏப்ரல் முட்டாள்கள் தினம்' கொண்டாடப்படுவதன் காரணம்
முன்னதாக, ஐரோப்பிய நாடுகளில் புத்தாண்டுஏப்ரல் 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ஆனால், போப் கிரிகோரி புதிய நாட்காட்டியை ஏற்க உத்தரவிட்டதும், ஜனவரி 1 முதல் புத்தாண்டு கொண்டாடப்படத் தொடங்கியது. எனினும் சிலர் தொடர்ந்து ஏப்ரல் 1 ஆம் தேதியே புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்டவர்களை முட்டாள்களாகக் கருதி கேலி செய்தனர். ஏப்ரல் முட்டாள்கள் தினம் இப்படித்தான் தொடங்கியது. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டில், ஏப்ரல் முட்டாள் தினம் மிகவும் பிரபலமாகிவிட்டது.
இந்தியாவில் முட்டாள் தினம்
உலகம் முழுவதும் ஏப்ரல் 1 ஆம் தேதியை ஏப்ரல் முட்டாள்கள் தினமாக கொண்டாட பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்பிரிக்க நாடுகளைப் பற்றிச் சொன்னால் அங்கே ஏப்ரல் முட்டாள் தினம் 12 மணி வரைதான் கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில், கனடா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி நாள் முழுவதும் ஏப்ரல் முட்டாள் தினம் கொண்டாடப்படுகிறது. சில அறிக்கைகளின்படி, இந்த நாள் 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இன்றைய காலக்கட்டத்தில், இந்தியாவில் கூட, மக்கள் இந்த நாளில் பிறரை ஏமாற்றவும் கேலி செய்தும் கொண்டாடுகின்றனர்.
மேலும் படிக்க | மரணம் நெருங்கும் போது ஏற்படும் உணர்வுகள் என்ன... ஆஸ்திரேலியாவில் ஒரு பகீர் அனுபவம்!
மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொசுக்கடி! கை கால்களை இழந்த நடனக் கலைஞர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ