மரணம் நெருங்கும் போது ஏற்படும் உணர்வுகள் என்ன... ஆஸ்திரேலியாவில் ஒரு பகீர் அனுபவம்!

இறப்பு நெருங்கும் போது அந்த கடைசி நேர உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை அறிய ஒரு புதிய முயற்சி ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 28, 2023, 12:41 PM IST
  • மரணத்தை அனுபவிப்பது எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.
  • உடலுக்குள்ளும் அதற்கு அப்பாலும் உள்ள பிரபஞ்சங்களைப் பற்றிய சிந்தனையைத் தருகிறது.
  • இறப்பு நெருங்கும் போது எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது.
மரணம் நெருங்கும் போது ஏற்படும் உணர்வுகள் என்ன... ஆஸ்திரேலியாவில் ஒரு பகீர் அனுபவம்!

மரணத்திற்கு பிறகு வாழ்வு உண்டு என பல கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மரணத்திற்குப் பிறகான வாழ்க்கை உள்ளது என்று நம்புகின்றனர். இந்து மதத்தை பொறுத்தவரை, ஒருவர் இறந்த பிறகு, ஆன்மா மற்றொரு உடலில் நுழையும் என நம்பப்படுகிறது.  பயம், பதட்டம், பீதி  என இறப்பதைப் பற்றி பெரும்பாலான மக்கள் எதிர்மறையான உணர்ச்சிகளை அனுபவிக்கிறார்கள். எந்த மனிதனும் இறப்பதை விரும்புவதில்லை என்பதை ஏறக்குறைய அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். விஞ்ஞானம் வாழ்க்கையை பற்றி நிறைய சொல்ல முடியும் ஆனால் இறப்பது பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனால் மரணத்தை நெருங்கி வந்தவர்கள், மரணத்திற்குப் பிறகு  என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அடிக்கடி பேசுகிறார்கள், சிந்திக்கிறார்கள். இந்நிலையில் இறப்பு நெருங்கும் போது அந்த கடைசி நேர உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை அறிய ஒரு புதிய முயற்சி ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இறப்பு நெருங்கும் போது எப்படி இருக்கும்?

மரணத்தை அனுபவிப்பது எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இப்போது, ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் என்ற தொழில் நுட்பம் மூலம் மக்களுக்கு இதே போன்ற அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது மற்றும் மக்கள் இறக்கும் போது என்ன உணரலாம் என்பதை அனுபவித்து பார்க்க உதவுகிறது. ஷான் கிளாட்வெல் என்ற கலைஞர், பாஸிங் எலக்ட்ரிக்கல் ஸ்டோர்ம்ஸ் (Passing Electrical Storms) என்ற Vertual Reality அமைப்பை உருவாக்கியுள்ளார். இது  இறப்பு நெருங்கும் போது எப்படி இருக்கும் என்ற உணர்வை இது கொடுக்கிறது. இதில் பங்கேற்பாளர்களுக்கு இதயத் துடிப்பு நிற்பது முதல் மூளை இறப்பு வரையிலான வாழ்க்கையின் உருவகப்படுத்தப்பட்ட வளர்ச்சியின் மூலம் அவர்களுக்கு ஒரு உணர்வை கொடுக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் இதயத் துடிப்பைச் சரிபார்க்க, நீங்கள் ஒரு தற்காலிக மருத்துவமனை படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இந்த அனுபவத்தைப் பெறும்போது நிலைமை கட்டுகடங்காமல் போனால், ஊழியர்கள் உங்களை இழுத்துச் செல்லலாம். சிலருக்கு இந்த செயலை தொடர மிகவும் பயமாக இருக்கும்.

மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொசுக்கடி! கை கால்களை இழந்த நடனக் கலைஞர்!

வெர்சுவல் ரியாலிட்டி சிமுலேட்டர்

மெல்போர்னைச் சேர்ந்தவரும் கண்காட்சியாளருமான மார்கஸ் க்ரூக், மெய்நிகர் யதார்த்தத்தில் இறப்பது எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறார். TikTok இல் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவில், "மரணம் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது, இதனை உணர்ந்த மக்கள் என்ன சொல்வார்கள் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் இதயத் துடிப்பு மானிட்டரில் உங்கள் விரலை வைத்துவிட்டு, உங்கள் கையை உயர்த்தச் சொல்கிறார்கள். மரணம் நெருங்குவது குறித்த வெர்ச்சுவல் ரியாலிட்டி என்பது மரணத்திற்கு அருகில் செல்லும் அனுபவமாகும். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் அமைக்கப்பட்டுள்ள இந்த வெர்சுவல் ரியாலிட்டி சிமுலேட்டரில் பங்கேற்பாளர்களுக்கு இதயத் துடிப்பு நிற்கப் போவது முதல் மூளை இறப்பு வரையிலான வாழ்க்கையின் உருவகப்படுத்தப்பட்ட வளர்ச்சியின் மூலம் உணர்ச்சிகளை கொடுக்கிறது. மின்சாரப் புயல்களைக் கடந்து செல்லும் அனுபவம், உடலுக்குள்ளும் அதற்கு அப்பாலும் உள்ள பிரபஞ்சங்களைப் பற்றிய சிந்தனையைத் தருகிறது என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | எகிப்தில் அகழ்வாராய்ச்சியாளர்களை அதிர வைத்த 2000 ஆட்டின் தலை மம்மிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News