Aadhaar: ஆதாரின் ‘இந்த’ சேவைகளை பெற இண்டெநெட் தேவையில்லை
ஆதார் வழங்கும் சில சேவைகளை இண்டெர்நெட் தேவையில்லை. பயோமெட்ரிக்கை லாக் செய்தல், அன்லாக் செய்தல் உட்பட சில சேவைகளை இண்டெர்நெட் இல்லாமலேயே பெற முடியும்.
ஆதார் வழங்கும் சில சேவைகளை பெற இண்டெர்நெட் தேவையில்லை. எஸ்எம்எஸ் மூலம், இண்டெர்நெட் இல்லாத நிலையிலும் ஆதார் சில சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம், பயனர்கள் மெய்நிகர் ஐடி உருவாக்கம் / மீட்டெடுப்பு, லாக்க் செய்தல் / அன்லாக் செய்தல், பயோமெட்ரிக் லாக்கை இயக்கலாம் அல்லது முடக்கலாம். மேலும் பயோமெட்ரிக்ஸை தற்காலிகமாக திறக்கலாம்.
வருமான வரி தாக்கல் (ITR) செய்ய, ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது, மேலும் இது அரசாங்க திட்டங்கள் மற்றும் பிற வங்கி நடவடிக்கைகளுக்கும் கட்டாயமாகிறது. இதற்கிடையில், UIDAI ஆதார் அட்டைதாரர்களுக்காக “எஸ்எம்எஸ்ஸில் ஆதார் சேவைகள்” கொண்டு வந்துள்ளது. அங்கு இணைய அணுகல் இல்லாமல் கூட சேவைகளைப் பெற முடியும்.
அத்தகைய வசதிகளைப் பெறுவதற்கு, பயனர்கள் முதலில் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1947 க்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். மேலும் எஸ்எம்எஸ் வடிவம் தேவைகளுக்கு ஏற்ப மாறுகிறது. ஆதார் எஸ்எம்எஸ் வசதி மூலம், பயனர்கள் மெய்நிகர் ஐடி உருவாக்கம் / மீட்டெடுப்பு, லாக்க் செய்தல் / அன்லாக் செய்தல், பயோமெட்ரிக் லாக்கை இயக்கலாம் அல்லது முடக்கலாம். மேலும் பயோமெட்ரிக்ஸை தற்காலிகமாக திறக்கலாம்.
ALSO READ | எச்சரிக்கை! தடுப்பூசி SMS மூலம் உங்கள் கணக்கில் உள்ள பணம் காலியாகலாம்
மெய்நிகர் ஐடி (Virtual ID) உருவாக்க
GVID Aadhaar-Number-last-4-digits என்ற வகையில் எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும்
உதாரணத்திற்கு, உங்கள் ஆதார் எண் 1234-5678-9123 எனில், உங்கள் எஸ்எம்எஸ் GVID 9123 என இருக்க வேண்டும்
Virtual ID-ஐ மீட்டெடுக்க
RVID ஆதார்-எண்-கடைசி -4 இலக்கங்கள்
ஒன் டைம் பாஸ்வேர்ட் (OTP) பெற
OTP ஐப் பெற நீங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த வடிவமைப்பைப் பயன்படுத்தவும்:
OTP-Aadhaar-NUMBER- கடைசி நாண்கு இலக்கங்கள்
OTP ஐப் பெற நீங்கள் மெய்நிகர் ஐடியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த வடிவமைப்பைப் பயன்படுத்தவும்:
மெய்நிகர் ஐடியைப் பயன்படுத்தினால்: GETOTP-Virtual ID-NUMBER கடைசி 6 இலக்கங்கள்
ஆதார் எண்ணை லாக் செய்ய
இந்த சேவையைப் பயன்படுத்த, பயனர் குறிப்பிட்ட வடிவத்தில் இரண்டு முறை எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்:
எஸ்எம்எஸ் 1: OTP-Aadhaar NUMBER-கடைசி நான்கு இலக்கங்கள்
எஸ்எம்எஸ் 2: LOCK UID--ஆதார் எண்-கடைசி 4 இலக்கங்கள்-OTP - கடைசி 6-இலக்கங்கள்
ஆதார் எண்ணைத் அன்லாக் செய்ய இதே போன்ற செயல்முறையைப் பின்பற்ற வேண்டும். கொடுக்கப்பட்ட வடிவத்தில் எஸ்எம்எஸ் அனுப்பவும்:
எஸ்எம்எஸ் 1: OTP-Virtual-ID-கடைசி 6 இலக்கங்கள்
எஸ்எம்எஸ் 2: UNLOCK UID-Virtual-ID-கடைசி 6 இலக்கங்கள் - OTP - கடைசி 6 இலக்கங்கள்
ALSO READ | Health Tips: உங்களை ‘FIT’ ஆக வைத்திருக்கும் DIET ப்ளான்கள்..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR