இந்த கொரோனா காலத்தில் இணையத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை போட்டி போட்டுக் கொண்டு சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாகவே, மாதமாதம் ரீசார்ஜ் செய்வதை விட வருடத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்வதைத் தான் பலரும் செளகரியமாக உணர்கிறார்கள். 


 Vi, Jio, Airtel மற்றும் BSNL  என அனைத்து நிறுவனங்களும், போட்டி போட்டுக் கொண்டு சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றன.  அதில் உங்களுக்கு பொறுத்தமான ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
 
ஏர்டெல் (Airtel ) ரீசார்ஜ் திட்டங்கள்


ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிடெட் என்ற பெயரில், ஒரு வருட காலத்திற்கு வழங்கும் ரீசார்ஜ் திட்டத்தில் 2,498 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 இலவச SMS உள்ளிட்டவற்றை பெற முடியும். எனினும் 100 இலவச SMS-களுக்கு பிறகு, அடுத்து  அனுப்பும் ஒவ்வொரு எஸ்எம்எஸ்-ஸூக்கும் 1 ரூபாய் கட்டணமாகும்.


அதேபோல ஏர்டெல் மற்றொரு திட்டமான 2,698 ரூபாய் மதிப்பிலான திட்டத்தின் மூலம் பயனர்கள் 1 வருடத்திற்கு இலவச டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் விஐபியை (Disney + Hotstar VIP) பெறலாம். மேற்கண்ட திட்டத்தில் உள்ள அனைத்து சலுகைகளும் இந்த திட்டத்திலும் கிடைக்கும்.


ALSO READ | NPS: கடைசி காலத்தில் நிம்மதியாக இருக்க, மாதம் ₹27,000 தரும் சூப்பர் பென்ஷன் திட்டம்


 


பிஎஸ்என்எல் (BSNL) வருட திட்டம்


பிஎஸ்என்எல் நிறுவனம் 1,999 ரூபாய்க்கான வருட திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் இலவச காலிங் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 3GB டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த டேட்டா முடிந்த பிறகு இணைய வேகம் 80kbps  ஆக இருக்கும். 


Vi -யின் வருட ரீசார்ஜ் திட்டங்கள்


Vi -யின் சிறந்த வருட ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்று 2,595 ரூபாய்க்கான திட்டம். இதன் மூலம் அன்லிமிடெட் கால்ஸ் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 2 GB டேட்டா என அனைத்தும் மற்ற நிறுவனங்களைப் போன்றே கிடைக்கிறது. அதோடு ஜீ எண்டர்டெயின்மென்ட், வீ மூவிஸ் & டிவி உள்ளிட்ட சேவைகள் கிடைக்கிறது.


இது தவிர மற்றொரு வருட திட்டத்தினையும் வழங்குகிறது. இதில் 2,399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 1.5 GB டேட்டா, வாய்ஸ் கால், இலவச எஸ் எம் எஸ் உள்ளிட்டவை மேற்கண்ட திட்டத்தினை போலவே கிடைக்கிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஜீ பிரிமீயம் சேவை மட்டும் கிடைக்காது.


ஜியோவின் (Jio) வருட திட்டம்


ஜியோவின் வருட திட்டத்தில் 2,399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ் எம் எஸ் உள்ளிட்டவை கிடைக்கும். இந்த 2ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64KBPS ஆக டேட்டா வேகம் குறையும். இந்த திட்டத்தில் ஜியோ ஆப்பிற்கான இலவச சந்தாவும் கிடைக்கும்.


ஜியோவில் ரூ.2,121 கட்டணத்தில்  நீண்ட கால ரீசார்ஜ் திட்டம் உள்ளது. இது 1.5 ஜிபி தினசரி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு சலுகைகள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்  மற்றும் ஜியோ செயலிகளுக்கு காம்ப்ளிமென்ட்டரி அணுகல் ஆகியவை கிடைக்கும்.


ALSO READ  | 7th Pay Commission: ஜூலை மாதம் முதல் தேதி முதல் 28% வரை சம்பள உயர்வு
 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR