நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஞாயிற்றுக்கிழமை தனது மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் பேங்கிங் செயலியான, 'YONO for Every Indian' மற்றும் இண்டரோபேரபிள் கார்டுலெஸ் கேஷ் வித்டிராவல் (Interoperable Cardless Cash Withdrawal -ICCW) வசதிகளை அறிமுகப்படுத்தியது. வங்கியின் 68வது வங்கி தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வசதியை SBI அறிமுகப்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ வங்கி ஏற்கெனவே தனது வாடிக்கையாளர்களுக்காக யோனோ (YONO) என்ற மொபைல் செயலியை வைத்துள்ளது. இந்த யோனோ ஆப் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது எஸ்பிஐ வங்கி தனது யோனோ மொபைல்செயலியை புதுப்பித்து பல்வேறு புதிய வசதிகள், சேவைகளுடன் புதிய யோனோ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.


'ஒவ்வொரு இந்தியனுக்கும் YONO' மூலம், வங்கி வாடிக்கையாளர்களுக்கான YONOவின் புதிய அவதாரத்தில் ஸ்கேன் செய்து பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். மேலும், தொடர்பு எண்கள் மூலம் பணம் செலுத்துதல், பணத்தை பெறுதல் போன்ற UPI அம்சங்களுக்கான அணுகல் அனைத்தும் கிடைக்கும்.


எஸ்பிஐ வங்கி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்  "இந்த மேம்படுத்தப்பட்ட செயலி ஒரு மைல்கல். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உள்ளடக்கிய மற்றும் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் வங்கி சேவைகளை வழங்குவதற்கான எஸ்பிஐயின் உறுதிப்பாட்டை மேலும் விரிவுபடுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2022-23 ஆம் ஆண்டிலேயே, YONO மூலம் 64 சதவீதம் அல்லது 78.60 லட்சம் சேமிப்புக் கணக்குகள் டிஜிட்டல் முறையில் பெறப்பட்டன. YONO செயலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு, மூலம் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்களும் YONO பயணத்தைத் தொடங்க அதிகாரம் அளிக்கும், இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் SBI குடும்பத்தின் ஒரு பகுதியாக மாற ஊக்குவிக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Money Tips: ₹15,000 முதலீட்டில் நேந்திரம் பழ தூள் தயாரித்து ஆயிரங்களை அள்ளலாம்!


"இன்டர்ஓபரேபிள் கார்டுலெஸ் கேஷ் வித்ட்ராவல் வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம், எஸ்பிஐ மற்றும் பிற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் 'UPI QR Cash' செயலியைப் பயன்படுத்தி எந்தவொரு வங்கியின் ICCW -இயக்கப்பட்ட ஏடிஎம்களில் இருந்தும் தடையின்றி பணத்தை எடுக்கலாம். பரிவர்த்தனை ஒரே முறை மூலம் எளிதாக்கப்படும். -ஏடிஎம் திரையில் காட்டப்படும் டைனமிக் க்யூஆர் குறியீட்டை பயன்படுத்தி இந்த வசதியை பெறலாம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


"பயனர்கள் தங்களின் UPI பயன்பாட்டில் உள்ள ஸ்கேன் மற்றும் பே அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வசதியாகப் பணத்தைப் பெறலாம். புதுமையான வசதி பணம் திரும்பப் பெறும் செயல்முறையை எளிதாக்கும் அதே வேளையில், இது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பையும் உறுதி செய்கிறது" என்று அது மேலும் கூறியது.


PIN ஐ உள்ளிட வேண்டிய அல்லது டெபிட் கார்டை  கையாள வேண்டிய தேவையை நீக்குவதன் மூலம், ICCW வசதி ஷோல்டர் சர்ஃபிங் அல்லது கார்டு குளோனிங் தொடர்பான அபாயங்களைக் குறைக்கிறது என்று வங்கி தெரிவித்துள்ளது. எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா கூறுகையில், "ஒவ்வொரு இந்தியருக்கும் நிதி சுதந்திரம் மற்றும் வசதியுடன் கூடிய அதிநவீன டிஜிட்டல் வங்கி தீர்வுகளை வழங்குவதில் எஸ்பிஐ அர்ப்பணிப்புடன் உள்ளது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு, யோனோ செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது, 'ஒவ்வொரு இந்தியனுக்கும் யோனோ' ('YONO for Every Indian' ) திட்டத்தை நிறைவேற்றும் எங்கள் இலக்கை  உண்மையாக்கும்." 


மேலும் படிக்க | விரைவில் பணக்காரர் ஆக வேண்டுமா..? இந்த 5 வழிமுறைகளை பின்பற்றினால் போதும்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ