Aadhaar: உங்கள் ஆதார் அட்டையை வேறு யாராவது பயன்படுத்தினார்களா? கண்டறிய சுலப வழி
உங்கள் ஆதார் அங்கீகார வரலாற்றை சரிபார்ப்பது மிகவும் எளிமையானது. அதற்கான சுலபமான வழிமுறைகள்
உங்கள் ஆதார் அங்கீகார வரலாற்றை சரிபார்ப்பது மிகவும் எளிமையானது. அதற்கான சுலபமான வழிமுறைகள்
ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கும் அவர்களின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் பணப் பரிவர்த்தனைகளுக்கும் ஆதாரைப் பயன்படுத்தலாம்.
தற்போது, ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால், ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பற்றியும் பலர் கவலைப்படுகிறார்கள்.
மேலும் படிக்க | ஸ்மார்ட் போன் தேவையில்லை... சாதாரண போனிலும் இனி பணப் பரிவர்த்தனை செய்யலாம்!
ஆதார் அட்டை
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் இன்றியமையாத ஆவணமாகும். இது அத்தியாவசிய அடையாளச் சான்றுகளில் ஒன்றாகும்.
அனைத்து அரசுப் பணிகளுக்கும், திட்டங்களைப் பயன்படுத்துவதற்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமானது. ஆதார் எண் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கேட்கப்படுகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய ஆதார் அட்டையில் குடிமக்களின் பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகைத் தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கும் அவர்களின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் பணப் பரிவர்த்தனைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
ஆனால், தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால், ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பற்றியும் பலர் கவலைப்படுகிறார்கள்.
UIDAI இன் இணையதளம், அதிகபட்சமாக 50 அங்கீகார பதிவுகள் அல்லது கடந்த ஆறு மாதங்களில் உங்கள் ஆதார் எண், அங்கீகாரத்திற்காக எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை காட்டும்.
மேலும் படிக்க | உஷார்! உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டுகளில் கவனம் தேவை
உங்கள் ஆதார் எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதையும் அறிய விரும்பினால், ஆதார் அங்கீகார வரலாற்றைக் கிளிக் செய்யவும்.
இங்கே 12 இலக்க ஆதார் எண் மற்றும் நான்கு இலக்க பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும்.
இப்போது Generate OTP என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு, உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
இப்போது இணையதளத்தில் புதிய பக்கம் திறக்கும். அங்கீகார வகையை உள்ளிடவும், தேதி , பதிவுகளின் எண்ணிக்கை மற்றும் OTP ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மேலும் படிக்க | Aadhaar Card மிகப்பெரிய அப்டேட்: இனி ஆதார் பதிவிறக்கம் செய்வது எளிதானது
இப்போது கீழ்தோன்றும் மெனுவிற்குச் சென்று அனைத்து தெரிவுகள் என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அதன் பிறகு, பக்கத்தில் தேதி வரம்பைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு ஆறு மாதங்களில் பயன்படுத்தப்பட்ட விவரங்கள் இருக்கும்.
இப்போது சமர்ப்பி பொத்தானை (submit button) அழுத்தி தேவையான அனைத்து தகவல்களையும் நிரப்பவும்.
உங்கள் ஆதார் அட்டை எங்கு, எப்போது பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்களை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: எஃப்.டி வட்டி விகிதங்களில் ஏற்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR