மூன்றரை ஆண்டுகளில் அபராதம் மூலம் ரூ.10,000 கோடி வசூல் செய்த அரசு வங்கிகள்
கடந்த மூன்றரை ஆண்டுகளில் வங்கிகள் அபராதம் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளது.
பெரு நகரங்களில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்சம் 5,000 ரூபாய், நகர்புறங்களில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் 3,000 ரூபாய், சிறு நகரங்களில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் 1,000 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக வைத்திருக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உட்பட அரசு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவிறுத்தி உள்ளது. குறைந்தபட்ச தொகை இல்லாதபட்சத்தில் அந்த தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு வங்கிகள் அறிவித்திருந்தன.
அதேபோல ஒரு மாதத்தில் ஏடிஎம் மூலம் அனுமதிக்கப்படும் இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் பணம் எடுத்தால் அதுக்கும் சேவை வரி செலுத்த வேண்டும் என அரசு வங்கிகள் கூறியுள்ளன.
இந்தநிலையில், அரசு வங்கிகள் கடந்த மூன்றை ஆண்டுகளில் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்காதவர்களிடம் மற்றும் ஏடிஎம் மூலம் இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் பணம் எடுத்தவர்களிடம் என அபராதம் மூலம் மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. இந்த புள்ளி விவரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளில் கூறப்பட்டு உள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டுகளில், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச அளவு பராமரிக்காதவர்களிடமிருந்து 10,000 கோடி ரூபாய் அரசாங்க வங்கிகள் மீட்டுள்ளன. இதனைத் தவிர, ஏடிஎம் மூலம் இலவசமாக நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டவர்கள் மீது குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. தரவுகளுடன் இந்த புள்ளிவிவரங்கள் வந்துள்ளன.