எல்ஐசி ஐபிஓ சமீபத்திய புதுப்பிப்பு: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஐபிஓ குறித்த பெரிய புதுப்பிப்பு வந்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு ஊழியர்கள் தொடர்பான உத்தரவை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. எல்ஐசி ஐபிஓவுடன் தொடர்புடைய வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகளை மே 15 வரை பணியிட மாற்ற செய்ய வேண்டாம் என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொது முதலீட்டாளர்களுக்கு ஐபிஓ நாளை திறக்கப்படும்


நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதி விவகாரத் துறை சார்பில் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி நாட்டின் இதுவரையிலான மிகப்பெரிய ஐபிஓ ஆகும். எல்ஐசி ஐபிஓ மே 2 அன்று ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு திறக்கப்பட்டது. இது பொது முதலீட்டாளர்களுக்காக 4 மே 2022 அன்று திறக்கப்பட்டு 9 மே 2022 அன்று மூடப்படும்.


ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து வலுவான ஆதரவு 


மோடி அரசு சார்பில், எல்ஐசியின் ஐபிஓவின் ஒரு பங்கின் விலை ரூ.902ல் முதல் ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு லாட்டில் 15 பங்குகள் இருக்கும். முன்னதாக மே 2 ஆம் தேதி, எல்ஐசியின் ஐபிஓ ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.5,620 கோடி முழு சந்தா பெறப்பட்டுள்ளது.



மேலும் படிக்க | LIC IPO: நீங்கள் எல்ஐசி பாலிசிதாரரா? உங்களுக்கு உள்ளது ஐபிஓ-வில் சிறப்பு சலுகை 


21 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு


ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ரூ.5,620 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டன. இந்தப் பிரிவில் இந்த ஐபிஓ முழுமையாக வாங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஐபிஓ மற்ற பொது முதலீட்டாளர்களுக்காக புதன்கிழமை திறக்கப்படும். இந்த ஐபிஓ மூலம் ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐபிஓவின் கீழ், அரசாங்கம் எல்ஐசி-யின் 22,13,74,920 பங்குகளை விற்பனை செய்கிறது.


சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் தகுதியான ஊழியர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.45 தள்ளுபடியும், எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.60 தள்ளுபடியும் கிடைக்கும். 


மேலும் படிக்க | LIC IPO மே 4 ஆம் தேதி வெளியீடு தொடங்குகிறது: ஒரு பங்கின் விலை இதுதான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR