LIC IPO முக்கிய அப்டேட்: ஏப்ரல் மாத இறுதியில் ஐபிஓ வெளிவரக்கூடும்
LICIPO: அரசாங்கம் எல்ஐசி ஐபிஓ-வை மார்ச் மாதம் தொடங்கவிருந்தது. ஆனால் ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் உலக சந்தையில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டதால் இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
எல்ஐசி ஐபிஓ பிரத்தியேக செய்தி: நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ-வுக்காக அனைத்து முதலீட்டாளர்களும் காத்திருக்கின்றனர். எங்கள் கூட்டாளர் இணையதளமான ஜீ பிசினஸ் எல்ஐசி ஐபிஓ தொடர்பான பிரத்யேக செய்திகளை வழங்கியுள்ளது. எல்ஐசி தனது ஐபிஓவை ஏப்ரல் 25 முதல் 29-க்குள் வெளியிடக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எல்ஐசி தனது யுடிஆர்ஹெச்பி (அப்டேட்டட் ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ்) ஐ செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவிடம் (செபி) நாளை அதாவது ஏப்ரல் 13ஆம் தேதி புதன்கிழமை தாக்கல் செய்யக்கூடும்.
எல்ஐசியின் ஐபிஓ விரைவில் வெளிவரும்
குறிப்பிடத்தக்க வகையில், அரசாங்கம் எல்ஐசி ஐபிஓ-வை மார்ச் மாதம் தொடங்கவிருந்தது. ஆனால் ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் உலக சந்தையில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டதால் இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது சந்தை நிலவரங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகத் தெரிகிறது. ஆகையால், எல்ஐசியின் ஐபிஓவை அரசாங்கம் விரைவில் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஐசியின் ஐபிஓ மூலம் அரசாங்கம் 5 முதல் 6.5 சதவிகிதப் பங்குகளை விற்கக்கூடும். எல்ஐசி ஐபிஓ மூலம் ரூ.50,000 முதல் 60,000 கோடி வரை திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கும்
எல்ஐசியின் ஐபிஓ நாட்டின் மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எல்ஐசி-யின் இந்த ஐபிஓ மூலம், நடப்பு நிதியாண்டில் ரூ.60,000 கோடிக்கு மேல் திரட்டி, அதன் திருத்தப்பட்ட முதலீட்டு இலக்கான ரூ.78,000 கோடியை அடைய அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
இதற்கான வரைவு பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது
எல்ஐசி பிப்ரவரியில் சந்தை கட்டுப்பாட்டாளரிடம் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரைவின்படி, எல்ஐசியின் மொத்தமுள்ள 632 கோடி பங்குகளில் 31,62,49,885 பங்குகளை விற்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில், 50 சதவிகிதம் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (QIBs) ஒதுக்கப்படும். மேலும் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு இந்த அளவு 15 சதவிகிதம் இருக்கும்.
மேலும் படிக்க | LIC IPO முக்கிய அப்டேட்: ரஷ்யா உக்ரைன் விவகாரத்தால் தாமதமாகிறதா வெளியீடு?
12 மாதங்களுக்கு செல்லுபடியாகும்
இப்போது எல்ஐசி ஐபிஓ செபியால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, இந்த ஐபிஓ ஒப்புதல் தேதியிலிருந்து 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும். அமைச்சரவை கூட்டத்தில் எல்ஐசி ஐபிஓ தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இதில், அன்னிய நேரடி முதலீடு (எப்டிஐஇ) தானியங்கி வழியில் 20 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டது. இந்த முடிவிற்குப் பிறகு, எல்ஐசி-ன் உத்தேச ஐபிஓவில் அன்னிய முதலீட்டிற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், சந்தையின் சரிவுச் சூழலைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது சந்தையில் இருந்து பணத்தை எடுக்கத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிசி வைத்திருப்பவர்கள், ஊழியர்களுக்கு பங்கு இருப்பு
எல்ஐசி பாலிசிதாரர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களுக்காக பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரு பிரிவினருக்கும் எல்ஐசி வெளியீடு ஐபிஓ தள்ளுபடியில் வழங்கப்படும். அறிக்கையின்படி, செபியிடம் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு ஆவணத்தின்படி, பாலிசிதாரர்களுக்கு பங்குகளில் 10 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் எல்ஐசி பாலிசி காலாவதியாகிவிட்டாலும், ரிசர்வ் கோட்டாவில் நீங்கள் பங்குகளை பெற வாய்ப்புள்ளது. இது தவிர எல்ஐசி ஊழியர்களுக்கு சதவீத பங்கு ஒதுக்கப்படும்.
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம்
குறிப்பிடத்தக்க வகையில், எல்ஐசியின் சந்தை மிகவும் வலுவாக உள்ளது. இதன் சந்தை பங்கு 64.1 சதவீதம் ஆகும். க்ரிசில் அறிக்கையின்படி, இது நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகும். ஈக்விட்டி மீதான அதன் வருமானம் மிக அதிகமாக, 82 சதவீதமாக உள்ளது. இந்த அறிக்கையின்படி, ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தின் அடிப்படையில் இது உலகின் மூன்றாவது பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். எல்ஐசி, 64 சதவீத சந்தைப் பங்கைக் கொண்ட உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக உள்ளது.
மேலும் படிக்க | LIC IPO: முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR