LIC IPO வெளியீட்டுக்கு முன் பெரிய அதிர்ச்சி: நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்

LIC IPO Latest Update: தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, கோவிட்-19 தொற்றுநோய் எல்ஐசியில் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 18, 2022, 10:41 AM IST
  • எல்ஐசி ஐபிஓ நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய ஐபிஓவாகும்.
  • பங்குகளில் எல்ஐசியின் முதலீடு ரூ.10 லட்சம் கோடியாகும்.
  • தற்போது எல்ஐசியின் எம்பெடட் மதிப்பு ரூ.5.4 லட்சம் கோடியாக உள்ளது.
LIC IPO வெளியீட்டுக்கு முன் பெரிய அதிர்ச்சி: நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம் title=

எல்ஐசி ஐபிஓ அப்டேட்: நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ-விற்காக அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த ஐபிஓ மூலம் 31.6 கோடி பங்குகள் அதாவது 5% பங்குகள் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஓ ஓஎஃப்எஸ் ஆக இருக்கும். இதில் புதிய பங்குகள் வெளியிடப்படாது. இந்த மெகா ஐபிஓவில் 35% வரை சில்லறை முதலீட்டாளர்கள் இருப்பார்கள். 

எனினும், தற்போது ஐபிஓ வருவதற்கு முன்பே எல்ஐசி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, கோவிட்-19 தொற்றுநோய் எல்ஐசியில் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது.

எல்ஐசி-க்கு பெரிய பின்னடைவு 

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக தனிநபர் மற்றும் குழு பாலிசிகளின் மொத்த எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. இதனுடன், தொற்றுநோய் காலத்தில் இறப்பு காப்பீடு கோரிக்கைகளும் அதிகரித்துள்ளன. 2019 நிதியாண்டு, 2020 நிதியாண்டு, 2021 நிதியாண்டு மற்றும் செப்டம்பர் 2021-ல் முடிந்த 6 மாதங்களுக்கு முறையே ரூ.17,128.84 கோடி, ரூ.17,527.98 கோடி, ரூ.23,926.89 கோடி மற்றும் ரூ.21,734.15 கோடி இறப்புக் காப்பீட்டுக் கோரிக்கைகளுக்கான கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதாவது, இந்த காலகட்டத்தில் எல்ஐசியின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது.

பாலிசி விற்பனையும் குறைந்துள்ளது

செபியிடம் எல்ஐசி அளித்த ஆவணங்களின்படி, எல்ஐசியின் பாலிசி விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2018-19 நிதியாண்டில் 7.5 கோடியாக இருந்த தனிநபர் மற்றும் குழு பாலிசிகளின் விற்பனை 16.76 சதவீதம் குறைந்து 2019-20 நிதியாண்டில் 6.24 கோடியானது. 2020-21 நிதியாண்டில், இது 15.84 சதவிகிதம் குறைந்து, இந்த எண்ணிக்கை 5.25 கோடியானது. ஊரடங்கு காரணமாக, தனிநபர் பாலிசிகளின் விற்பனை 2019-20 நான்காவது காலாண்டில் 22.66 சதவீதம் குறைந்து 63.5 லட்சமாக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 82.1 லட்சமாக இருந்தது என்று நிறுவனம் கூறியுள்ளது. 

இது மட்டுமின்றி, 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுகளிலும் இதன் தாக்கம் இருந்தது. இந்த காலகட்டத்தில், இந்த எண்ணிக்கை முறையே 46.20 சதவீதம் குறைந்து 19.1 லட்சமாகவும், பின்னர் 34.93 சதவீதம் குறைந்து 23.1 லட்சமாகவும் இருந்தது.

மேலும் படிக்க | முதலீட்டாளர்களுக்கு நற்செய்தி, இந்த தேதி வெளிவருகிறது LIC IPO: முக்கிய அம்சங்கள் இதோ

நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ

தற்போது எல்ஐசியின் எம்பெட்டட் மதிப்பு ரூ.5.4 லட்சம் கோடியாக உள்ளது. இந்த நிதியாண்டு வரை அதாவது FY21 வரை, புதிய வணிக பிரீமியத்தில் சந்தைப் பங்கு மதிப்பு 66% ஆக இருந்தது. எல்ஐசியின் சந்தை மிகவும் வலுவாக உள்ளது. FY21 வரை எல்ஐசி 13.5 லட்சம் முகவர்களைக் கொண்டுள்ளது. FY21 வரை, எல்ஐசியின் மொத்த பாலிசி 28.3 கோடியாக இருந்தது. 

மதிப்பீட்டைப் பற்றி பேசினால், மதிப்பீட்டிற்கு எம்பெட்டட் மதிப்பு அவசியமாகும். மொத்த மதிப்பீடு பின்னர் RHP இல் உள்ளிடப்படும். எல்ஐசி ஐபிஓ மற்றும் முழு மூலதனத்தின் உரிமையும் நிறுவனத்திற்கு அல்லாமல் அரசாங்கத்திற்குச் செல்லும். 

யாருக்கு என்ன, எவ்வளவு கிடைக்கும்?

எல்ஐசி ஐபிஓhttps://zeenews.india.com/tamil/india/lic-ipo-lic-has-filed-its-draft-share-sale-prospectus-with-sebi-382228வில் ஊழியர்களின் ரிசர்வ் கோட்டா அதிகபட்சம் 5% வரை இருக்கும். அதே நேரத்தில், எல்ஐசி பாலிசி வைத்திருப்பவர்களின் இருப்பு ஒதுக்கீடு அதிகபட்சம் 10% வரை இருக்கும். QIB களுக்கு அதிகபட்சம் 50% மற்றும் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு QIB களின் பங்குகளில் அதிகபட்சம் 60% வரை பங்கு இருக்கும்.

மேலும் படிக்க | LIC IPO: இதில் முதலீடு செய்ய அனைவரும் காத்திருக்கும் காரணம் என்ன? விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News