LIC Scheme: குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம், வெறும் ரூ.150 முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகலாம்
LIC Scheme: சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதில் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. குழந்தை பிறந்தவுடன், பல பெற்றோர்கள் அவரது எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்கத் தொடங்குகிறார்கள்.
எல்ஐசி திட்டம்: குழந்தைகளுக்கு ஒரு நல்ல பரிசை நீங்கள் அளிக்க விரும்பினால், அதற்கு ஒரு அருமையான எல்ஐசி திட்டம் உள்ளது. தற்போது, சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதில் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஒரு குழந்தை பிறந்தவுடன், பல பெற்றோர்கள் அவரது எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்கத் தொடங்குகிறார்கள்.
பெற்றோர் தங்கள் சம்பாத்தியத்தில் ஒரு சதவீதத்தையாவது சேமித்து வைத்தால், குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பாக்க முடியும்.
எல்ஐசி உங்களுக்காக நியூ சில்ட்ரன் மணி பேக் பிளான் என்ற ஒரு சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்றலாம். இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடு உங்கள் குழந்தைக்கு சிறந்த ஒரு பரிசாக இருக்கும்.
நியூ சில்ட்ரன் மணி பேக் பிளான் திட்டம்
உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பினால், இன்றே எல்ஐசியின் இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குங்கள். இந்த சிறு சேமிப்பின் மூலம் உங்கள் குழந்தை எதிர்காலத்தில் கோடீஸ்வரனாக மாறுவார். இதற்கு நீங்கள் தினமும் 150 ரூபாய் மட்டுமே சேமித்தால் போதும்.
இந்த பாலிசியின் விவரம் என்ன?
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் நியூ சில்ட்ரன் மணி பேக் பாலிசி 25 ஆண்டுகளுக்கானது. இதில் மெச்யூரிடி தொகையை தவணைகளில் பெறுவீர்கள். உங்கள் குழந்தைக்கு 18 வயதாகும்போது இந்த தொகை முதல் முறையாக செலுத்தப்படுகிறது. இரண்டாவது முறை குழந்தைக்கு 20 வயதாகும்போதும், மூன்றாவது முறை 22 வயதாகும்போதும் அளிக்கப்படுகின்றது.
மேலும் படிக்க | LIC பங்குதாரர்களுக்கு நல்ல செய்தி: ஈவுத்தொகை கிடைக்கவுள்ளது, விவரம் இதோ
தொகை மற்றும் போனஸ்
நியூ சில்ட்ரன் மணி பேக் பாலிசி திட்டத்தின் கீழ், ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவருக்கு, மணி பேக் டேக்சாக, காப்பீட்டுத் தொகையில் 20 சதவிகிதம் கிடைக்கும். இதனுடன், குழந்தைக்கு 25 வயதாகும்போது, முழுத் தொகையும் அவருக்குத் திருப்பித் தரப்படுகிறது. மேலும் மீதமுள்ள 40 சதவீத தொகையுடன் போனஸும் வழங்கப்படுகிறது. இப்படி இந்த பாலிசியில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் குழந்தை இளைய பருவத்தை அடையும் போது கோடீஸ்வரர் ஆகிவிடுவார்.
வெறும் ரூ.150 சேமித்தால் போதும்
குழந்தையின் எதிர்காலத்திற்காக தொடங்கப்பட்ட இந்த காப்பீட்டின் தவணை ஆண்டுக்கு ரூ.55,000-க்கு வருகிறது. 365 நாட்களின் படி பார்த்தால், 25 ஆண்டுகளில் மொத்தம் 14 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். மெச்யூரிட்டி காலத்தில் மொத்தம் 19 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் காப்பீடு செய்யப்பட்டவர் இறக்கவில்லை என்றால் மட்டுமே இந்த விதி பொருந்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் பணத்தை எடுக்க விரும்பவில்லை என்றால், பாலிசியின் முதிர்வுக்கான வட்டியுடன் முழுத் தொகையையும் பெறுவீர்கள்.
இந்த பாலிசியின் சிறப்பம்சம் என்ன
1. பாலிசி எடுப்பதற்கான வயது வரம்பு பூஜ்ஜியத்திலிருந்து 12 ஆண்டுகள் வரை ஆகும்.
2. முதிர்வு நேரத்தில் 60 சதவீதம் பணம் தவணையாகவும், 40 சதவீதம் போனஸுடனும் கிடைக்கும்.
3. இதன் கீழ், எடுக்கக்கூடிய குறைந்தபட்ச காப்பீடு ரூ. 1,00,000 மற்றும் அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை.
4. தவணைகள் செலுத்தப்படாவிட்டால், வட்டியுடன் மொத்த தொகையும் கிடைக்கும்.
பாலிசி எடுக்க இந்த ஆவணங்கள் அவசியம்
1. இந்த பாலிசிக்கு ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் பெற்றோரின் முகவரிச் சான்று தேவை.
2. காப்பீடு செய்யப்பட்டவரின் மருத்துவ ஆவணங்கள் தேவைப்படும்.
3. பாலிசியை எடுக்க, ஒருவர் ஏதேனும் எல்ஐசி கிளைக்குச் சென்று அல்லது ஒரு ஏஜெண்டிடம் இருந்து படிவத்தை நிரப்ப வேண்டும்.
4. இந்த காலகட்டத்தில் காப்பீடு செய்யப்பட்டவர் இறந்துவிட்டால், காப்பீட்டின் பிரீமியத்தில் 105 சதவீதம் செலுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | LIC Home Loan: குறைந்த விலையில் சொந்த வீடு வாங்கலாம், எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR