LIC Alert: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) சின்னத்தை காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதியின்றி தங்கள் வணிகத்திற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவோ பயன்படுத்தினால், அவர்களுக்கு பெரிய சிரமம் ஏற்படக்கூடும். அப்படி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என LIC எச்சரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

LOGO-வை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்: LIC


இந்திய காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதியின்றி Life Insurance Corporation of India-வின் லோகோவை அங்கீகாரமின்றி யாரேனும் பயன்படுத்தினால், அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்றும் அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எச்சரித்துள்ளது.


வழக்கமாக மக்கள் தங்கள் வணிகத்தை பிரபலமடையச் செய்ய எல்.ஐ.சியின் சின்னத்தை பேனர்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இப்போது அவர்களால் அப்படி செய்ய முடியாது. ஒன்று அவர்கள் இப்படி செய்வதை நிறுத்த வேண்டும் அல்லது இதற்கான முறையான ஒப்புதலை LIC-யிடமிருந்து பெற வேண்டும். 


ALSO READ: ரூ.100 முதலீடு செய்து ரூ.75 ஆயிரம் பெறுங்கள், இந்த LIC திட்டத்தை தெரிந்துகொள்ளுங்கள்


'லோகோவின் பயன்பாடு சட்டவிரோதமானது'


இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC இது குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளது. அதில் எல்.ஐ.சியின் அனுமதியின்றி அதன் சின்னத்தை எந்த வலைத்தளத்திலும், அச்சிடப்படும் பொருட்களிலும், டிஜிட்டல் பதிவுகளிலும் பயன்படுத்த முடியாது என்று LIC குறிப்பிட்டுள்ளது. எல்.ஐ.சி தனது ட்வீட்டில் தனது லோகோவைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் கூறியுள்ளது. சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களின் கீழ் அத்தகைய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் LIC எச்சரித்துள்ளது.


பாலிசிதாரர்கள் மோசடி செய்திகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்


இது தவிர, LIC தனது பாலிசிதாரர்கள் (LIC Plicy Holders) மோசடிகளிலிருந்து தப்பித்திருக்க ஒரு இரண்டாவது ட்வீட்டையும் வெளியிட்டுள்ளது. எல்.ஐ.சி தனது பாலிசிதாரர்களிடம் போனஸ் தொடர்பான தகவல்களை பாலிசிதாரர்களுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொள்வதில்லை என்பதை LIC தெளிவுபடுத்தியுள்ளது. எந்த ஒரு LIC அதிகாரியும் எப்போதும் வாடிக்கையளர்களின் பாலிசி எண், பான் எண் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விவரங்களை தொலைபேசியில் கேட்க மாட்டார் என LIC கூறியுள்ளது. 


இங்கே புகார் அளிக்கலாம்


உங்களுக்கு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்பு அல்லது மின்னஞ்சல் வந்தால், உடனடியாக ஒரு புகாரை அளிக்குமாறு எல்.ஐ.சி கூறியுள்ளது. LIC பாலிசிதாரர்கள் spuriouscalls@licindia.com இல் புகாரளிக்கலாம். LIC தனது பாலிசிதாரர்களுக்காக கால் சென்டர் சேவை எண் 022-6827 6827 ஐயும் வெளியிட்டுள்ளது. எல்.ஐ.சி கால் சென்டர் சேவைகள் 7 நாட்களும் 24 மணி நேரமும் பாசிலிசிதாரர்களுக்கு கிடைக்கும்.


ALSO READ: Good News! மே 10 முதல் LIC ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு; 5 நாட்கள் வேலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR