LIC IPO அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாய் அமையும், முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கும்

அண்மையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ .25,000 கோடியாக கணிசமாக உயர்த்த முன்மொழியப்பட்டது. இது அடுத்த நிதியாண்டில் பங்குச்சந்தையில் நிறுவனம் பட்டியலிடப்பட உதவும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2021, 02:47 PM IST
  • LIC IPO காரணமாக எந்த ஊழியரும் தனது வேலையை இழக்க மாட்டார்-அனுராக் தாக்கூர்
  • இந்தியாவின் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கங்களில் இருக்கும் -அனுராக் தாக்கூர்.
    LIC அடுத்த நிதியாண்டில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.
LIC IPO அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாய் அமையும், முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கும் title=

LIC IPO Latest News: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) IPO காரணமாக எந்த ஊழியரும் தனது வேலையை இழக்க மாட்டார் என மத்திய நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் திங்களன்று தெரிவித்தார். இந்த நடவடிக்கை LIC மற்றும் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் என்று அவர் கூறினார். பி.டி.ஐ செய்தியின்படி, மக்களவையில் காங்கிரசின் மணீஷ் திவாரி மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த நாமா நாகேஸ்வர ராவ் ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,  ஐபிஓ செயல்முறை தொடங்கியுள்ளதாகவும், இந்த நிறுவனத்தில் அரசு அதிகபட்சமாக மக்களை முதலீடு செய்யவைக்க முயற்சிக்கிறது என்றும் கூறினார். 

பொருத்தமான நேரத்தில் விலை விவரம் அறிவிக்கப்படும். 

செய்தியின் படி, IPO செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது என்று தாக்கூர் கூறியுள்ளார். பொருத்தமான நேரம் வரும்போது, ​​சந்தையில் அதன் விலை எவ்வளவு என்று தெரிவிக்கப்படும்.  சந்தையில் அதன் விலையை அதிகரிக்கவும் அதிகமான மக்கள் இதில் முதலீடு செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்றபடி இதனால் யாருடைய வேலையும் போகாது எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். மாறாக இது LIC முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் என்று அவர் கூறினார்.

ALSO READ: LIC IPO: ஒரு கோடி டீமேட் கணக்குகளை திறக்க முடிவு, இந்த IPO-ஐ தவற விடாதீர்கள்

வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கங்களில் இருக்கும் 

திவாரி நாட்டின் பொருளாதாரத்தின் நிலை மோசமாக இருப்பதாக விவரித்த பின்னர் அதற்கு பதிலளித்த தாக்கூர், இந்தியா விரைவாக மீண்டு வருவதாகவும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் இரட்டை இலக்கங்களில் இருக்கும் என்றும் பல நிறுவனங்கள் கூறியுள்ளதை தான் தெளிவுபடுத்த விரும்புவதாகவும் கூறினார். பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவதற்கான சாத்தியம் தொடர்பான கேள்விக்கு, இது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சில வரிகளையும் அரசு குறைக்க வேண்டும் என்றும், சில வரிகளை குறைப்பதையும் மையம் பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

நிறுவனத்தின் மூலதனத்தை 100 கோடி

அண்மையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ .25,000 கோடியாக கணிசமாக உயர்த்த முன்மொழியப்பட்டது. இது அடுத்த நிதியாண்டில் பங்குச்சந்தையில் நிறுவனம் பட்டியலிடப்பட உதவும். தற்போது, ​​29 கோடி பாலிசிகளைக் கொண்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கட்டண மூலதனம் 100 கோடி ரூபாய் ஆகும். எல்.ஐ.சி 1956 ஆம் ஆண்டில் ஐந்து கோடி ரூபாயின் ஆரம்ப மூலதனத்துடன் தொடங்கப்பட்டது.

ALSO READ: Bank Customers alert: 2 வாரத்திற்குப் பிறகு உங்கள் Cheque book, Passbook செல்லாது

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News