செப்டம்பர் 30-க்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைத்துவிடுங்கள்!
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துவிட்டால் எந்த கட்டணமும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்காது.
ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30-ம் தேதியாக இருந்தது. ஆனால் மத்திய அரசு செப்டம்பர் 30 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அந்த்யோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை வீட்டுத் திட்டங்களின் பலன்களைப் பெற ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதனால்தான் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறது. ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பவர்கள் இலவச ரேஷன் பெறலாம். அரசு வழங்கும் இலவச ரேஷன் பொருட்களை மாதந்தோறும் பெறலாம்.
மேலும் படிக்க | Indian Railways: சிக்கனத்தில் இறங்கும் ரயில்வே... பயணிகளுக்கு இதனால் பலன்கள் என்ன?
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது இலவசம். செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே இந்த சேவை இலவசம். ஆன்லைனில் அல்லது ஆஃப்லைன் என எதில் வேண்டுமானாலும் நீங்கள் இதனை செய்து கொள்ளலாம். எதற்காக என்றால், ஒருவரின் பெயரில் இரண்டு, மூன்று ரேஷன் கார்டுகளை எடுத்தவர்களும் உள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க, ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மேலும், தகுதியற்ற நபர்களுக்கு ரேஷன் கார்டுகளை நீக்கவும் இது உதவுகிறது.
ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் இணைக்க அருகில் உள்ள அரசு அலுவலகத்திற்குச் செல்லவும் அல்லது ஆன்லைனில் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க பின்வரும் படிகளைப் பின்பற்றவும்.
- உங்கள் மாநிலத்தின் பொது விநியோக அமைப்பு போர்ட்டலைத் திறக்கவும்.
- ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இணைக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு உங்கள் ரேஷன் கார்டு எண், ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
- உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும். ஓடிபியை உள்ளிட்ட பிறகு, உங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டை இணைக்கப்படும்.
மக்களுக்கு மானிய விலையில் உணவு வழங்க அரசு ரேஷன் கார்டுகளை வழங்குகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மக்கள் அரசிடமிருந்து ரேஷன் பொருட்களை மானிய விலையில் அல்லது இலவசமாகப் பெறலாம். ரேஷன் கார்டுகளை அடையாளச் சான்றாக சமர்ப்பிக்கலாம். தெலுங்கானாவில் புதிய ரேஷன் கார்டுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் ரேஷன் கார்டுகளை முதன்முறையாக அரசு வழங்க உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ