நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க.. ‘இந்த’ விஷயங்களை தினமும் செய்யுங்கள்!
வாழ்க்கையில் வெற்றி நம் வசப்பட, தினமும் சில வேலைகளை செய்ய வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அப்படி நம் வாழ்வை மாற்றிக்கொள்ள, நமக்கு சில புதிய பழக்கங்கள் தேவைப்படுகின்றன. இவற்றை, நாம் தினம்தோறும் செய்ய வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
சரியான இலக்குகள்:
உங்கள் வாழ்வில் என்ன இலக்குகள் இருந்தாலும், அதை சிறிது-பெரிதாக மாற்றி அதை அடைய முயற்சி செய்ய வேண்டும். அந்த இலக்குகள், உங்களுக்கு மகிழ்ச்சி தருபவையாகவும், உங்கள் மனதை திருப்தி படுத்துபவையாகவும் இருக்க வேண்டும்.
காலை பழக்கங்கள்:
காலையில், நல்ல பழக்கங்கள் செய்வதை கடைப்பிடிக்க வேண்டும். கண் விழித்தவுடன் படுக்கையில் இருந்து எழுந்து கொள்வது, தியானம் செய்வது, ஜர்னல் எழுதுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை செய்யலாம்.
வேலைக்கு முன்னுரிமை:
தினமும், நீங்கள் செய்ய நினைக்கும் வேலைகளை லிஸ்ட் போட வேண்டும். அதில், எந்த வேலையை முதலில் முடிக்க வேண்டும் என்பதை பார்த்து, அதை முடிக்க வேண்டும். இதனால், நீங்கள் வேலை பளுவை குறைத்துக்கொள்வதுடன் அனைத்து வேலைகளையும் முடிக்கவும் முடியும்.
நேர மேலாண்மை:
எதை வீணாக்கினாலும், நேரத்தை மட்டும் வீணடிக்கவே கூடாது. படித்தாலும் சரி, வேலைக்கு சென்றாலும் சரி, தொடர்ந்து ஒரே விஷயத்தை தொடர்ந்து பல மணி நேரங்கள் செய்யாமல் இடையில் சில மணி நேரங்கள் ஓய்வு எடுத்து, பின்னர் அந்த வேலையை தொடர வேண்டும்.
கற்றல்:
நமக்கு வயதாவது போல, நமது மூளைக்கும் வயதாகும். ஆனால், ஒரு போதும் அந்த மூளையை மழுங்க விட்டுவிட கூடாது. தினமும் புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு புத்தகங்கள் மட்டுமல்ல, பாட்கேஸ்ட் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் கற்றுக்கொள்ளலாம்.
நெட்வர்க்:
வேலை பார்க்கும் இடத்தில், வெளி இடத்திற்கு செல்லும் போது, உங்களுக்கு கற்றுக்கொடுத்தவர்கள் மற்றும் உங்களை போன்ற எண்ணம் கொண்டவர்களை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அவர்களுடன் நெட்வர்க் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களுடைய பெயரும் அவர்களுக்கு பெரிதாக மனதில் பதியும்.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை:
தினமும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, உடற்பயிற்சிகளை செய்வதால் ஹெல்தியான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கலாம்.
கவனச்சிதறல்:
நாம் எண்ணிய காரியங்களை, பெரும்பாலான சமயங்களில் செய்ய முடியாமல் போவதற்கு காரணமாக இருப்பது, கவனச்சிதறல்தான். எனவே, அதை உங்கள் வாழ்வில் இருந்து தூக்கி, ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.
ஒழுக்கம்:
மனதும் உடலும் மட்டுமல்ல, உங்களை சுற்றி இருக்கும் விஷயங்களும் ஒழுக்மான முறையில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இதனால், தேவையற்ற விஷயங்களை பார்ப்பதையும் நினைப்பதையும் தவிர்ப்போம்.
மேலும் படிக்க | இந்த 7 இடங்களில் நீங்கள் கட்டாயம் அமைதியாக இருக்க வேண்டும்..!
தோல்விகள்:
வாழ்வில் வெற்றியும் தோல்வியும் எப்போதும் வந்து போகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தோல்வி ஏற்படும் என்பதற்காக, வாழ்வில் ரிஸ்க் எடுக்காமல் இருந்து விடக்கூடாது.
நன்றியுணர்வு:
வாழ்வில் ஏற்கனவே நமக்கு பல விஷயங்கள் கிடைத்திருக்கும். ஆனால் நாம், ஏதோ ஒரு விஷயத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தி, “அது கிடைத்தால்தான் மகிழ்ச்சி” என்ற மனநிலையுடன் இருப்போம். எனவே, ஏற்கனவே உங்கள் வாழ்வில் இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்து நன்றியுணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் பிரதிபலனாக, இன்னும் பல விஷயங்கள் உங்கள் கைகளுக்கு வந்து சேரலாம்.
மேலும் படிக்க | முகப்பருவுக்கு குட்பை-பொடுகுக்கு டாட்டா…இரண்டுக்கும் ஒரே டிப்ஸ்! என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ