இந்த 7 இடங்களில் நீங்கள் கட்டாயம் அமைதியாக இருக்க வேண்டும்..!

அமைதியாக இருப்பது என்பது உங்களை பெரும்பாலான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

மனிதனின் மிகப்பெரிய ஆயுதம் என்னவென்றால் அமைதி என சொல்வார்கள். அந்த அமைதியை எங்கெங்கெல்லாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /7

காரசாரமாக வாக்குவாதம் செய்யும்போது உணர்ச்சிகள் தடித்து, கடினமான வார்த்தைகளை பயன்படுத்த தொடங்குவீர்கள். அவை பெரும்பாலும் மோதலுக்கு வழிவகுக்கும். அந்த இடத்தில் அமைதியாக இருப்பது என்பதே சிறந்த முடிவாகும்.

2 /7

உண்மையான தகவல்கள், முழுமையான தகவல்கள் இல்லாதபோது எந்த இடத்திலும் வாக்குவாதம் செய்யாதீர்கள். அந்த இடத்தில் நீங்கள் அமைதியாக இருப்பது சிறந்தது

3 /7

உங்களின் கருத்துகளை கூறுமாறு அழைக்கப்படாதபோது நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. இதனால் உங்கள் மனம் காயப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளும்.

4 /7

மிக முக்கியமான பிரச்சனைகள் என தெரியும் விஷயத்தில் அமைதியை கடைபிடிப்பது மட்டுமே சிறந்த வழியாகும். மௌனம் மரியாதையான ஒன்றாக பார்க்கப்படும்.

5 /7

யாரும் அறிந்திருக்காத விஷயங்களை நீங்கள் அறிந்து வைத்திருக்கும்போது கட்டாயம் அமைதியாக இருக்க வேண்டும்

6 /7

பணிக்கு செல்லும் இடத்தில் சண்டை சச்சரவுகள் உருவானால் நீங்கள் அந்த இடத்தில் அமைதியாக இருப்பது நல்லது.

7 /7

நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளின் தாக்கத்தை பற்றி தெரியவில்லை என்றால் நீங்கள் அமைதியாக இருந்துவிடுங்கள்.