காலையில் எழுந்ததும் அதிகம் சோர்வாக உள்ளதா? இந்த விஷயங்களில் கவனம்!

இரவு முழுவதும் தூங்கிய பிறகும் காலையில் பலரும் சோர்வாக உணர்கிறார்கள். நீங்கள் அடிக்கடி இப்படி உணர்ந்தால், உங்கள் தூக்கத்தின் தரத்தை பற்றி கண்டறிவது நல்லது.

 

1 /6

தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது மக்கள் தூங்கும் போது சுவாசிக்க கடினமாக உள்ளது. இதனால் அவர்கள் இரவில் அதிக நேரம் எழுந்திருப்பதோடு நல்ல ஓய்வு கிடைக்காமல் போகலாம். இதனால் காலையில் சோர்வாக உணரலாம்.  

2 /6

நீங்கள் தூங்கும் இடம் உங்கள் தூக்க தரத்தை பாதிக்கலாம். அதிக வெளிச்சம், அதிக ஒலிகள் அல்லது அதிக வெப்பம் போன்ற விஷயங்கள் தூக்கத்தை கடினமாக்கும். நீங்கள் தூங்கும் முன்பு அந்த இடம் அமைதியாகவும், இருட்டாகவும் இருந்தால் நல்லது.   

3 /6

ஃபோன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகளில் இருந்து வரும் வெளிச்சம் உங்கள் தூக்கத்தை கெடுக்கும். நீங்கள் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இவற்றை பயன்படுத்த வேண்டாம்.   

4 /6

நீங்கள் கவலையாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்ந்தால், அது தூங்குவதை கடினமாக்கும், ஏனெனில் உங்கள் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். எனவே தூங்கும் முன்பு மூச்சு பயிற்சி, தியானம் அல்லது புத்தகம் படிப்பது தூங்குவதை எளிதாக்கலாம்.  

5 /6

இரவில் அதிகம் சாப்பிட்டால் தூக்கம் தடைபட வாய்ப்புள்ளது. உணவு ஜீரணம் ஆகாமல் வயிற்றில் சில பிரச்சனைகளை உண்டு செய்யலாம். எனவே இரவில் இவற்றை கட்டுப்பாட்டில் வைப்பது நல்லது.  

6 /6

போதுமான அளவு தூங்கிய பிறகும் உங்களுக்கு தூக்கம் வருகிறது என்றால், உடலில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தம். சரியான மருத்துவரை தேர்வு செய்து பார்ப்பது நல்லது.