புதுடெல்லி: புனிதமான பண்டிகைகள் மற்றும் விரதங்கள் நிறைந்துள்ள ஜூன் மாதம். இந்து நாட்காட்டியில் ஒரு சிறப்பு மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில், இந்து மதத்தினர், நிர்ஜலா ஏகாதசி, கங்கா தசரா, யோகினி ஏகாதசி, பிரதோஷ விரதம், ரோகிணி விரதம், மிதுன சங்கராந்தி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் மற்றும் விரதங்களைக் கடைப்பிடிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு விதங்களில் முக்கியமானவை. ஆன்மீக நோக்கில் ஜூன் மாதம் வரும் பண்டிகைகள் மற்றும் விரதங்களை தெரிந்துக் கொள்வோம்.


இந்த மாதம் வரும் நீரஜலா ஏகாதசி மற்றும் கங்கா தசரா ஆகியவை இந்து மதத்தினருக்கு புனிதமான நாட்கள். நீர்நிலைகளில் புனித நீராடி பக்தர்கள் வழிபடுவார்கள்.


மேலும் படிக்க | வளங்களை அள்ளித்தரும் ஏகாதசி விரதம்; கடைபிடிக்கும் முறை


பீம்சேனி ஏகாதசி என்றும் அழைக்கப்படும் நீர்ஜாலா ஏகாதசியில் பல இந்துக்கள் விரதம் இருப்பவர்கள், இறந்த பிறகு சொர்க்கம் செல்வார்கள் என்பது நம்பிக்கை.


இந்த நாள் மே-ஜூன் மாதங்களில் வளர்பிறையின் 11 வது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நீர்ஜலா ஏகாதசி ஜூன் 11ஆம் தேதி வருகிறது.


கோடைக்காலமான இந்த சமயத்தில் மண் பானைகளில் தண்ணீரை பறவைகளுக்கு வைப்பார்கள். தண்ணீர் தானம் கொடுப்பது சூரிய பகவானை மகிழ்விக்கிறது என்று சொல்லப்படுகிறது.நதியில் நீராடும்போது சூரியனுக்கு அர்க்கியம் செய்வதும் இதன் அடிப்படையில் தான்.


ஜூன் மாதத்தில் அனுசரிக்கப்படும் முக்கியமான விரதங்கள் மற்றும் பண்டிகைகளின் பட்டியல். 


மேலும் படிக்க | பத்மநாபா ஏகாதசி விரதம்; தேவசயனி ஏகாதசி விரத மகிமைகள்
 
ஜூன் 03, வெள்ளிக்கிழமை விநாயக சதுர்த்தி அனுசரிக்கப்படுகிறது
ஜூன் 08, புதன்கிழமை மாதாந்திர துர்காஷ்டமி 
ஜூன் 09, வியாழன் கங்கா தசரா கொண்டாடப்படும்
ஜூன் 10, வெள்ளிக்கிழமை நிர்ஜலா ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது
ஜூன் 12, ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ விரதம் 
ஜூன் 14, செவ்வாய்கிழமை ஜ்யேஷ்டா பூர்ணிமா விரதம், வட் பூர்ணிமா விரதம் அனுசரிக்கப்படும்.


மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி 2022: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்


ஜூன் 15, புதன்கிழமை மிதுன சங்கராந்தி அனுசரிக்கப்படும் 
ஜூன் 17, வெள்ளிக்கிழமை கிருஷ்ணபிங்கல் சங்கஷ்டி சதுர்த்தி அனுசரிக்கப்படுகிறது
ஜூன் 20, திங்கட்கிழமை காலஷ்டமி விரதம் அனுசரிக்கப்படும்
ஜூன் 24, வெள்ளிக்கிழமை யோகினி ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது. இது ஆண்டின் மிக நீண்ட நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 26, ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ விரதம்  
ஜூன் 27, திங்கட்கிழமை மாதாந்திர சிவராத்திரி, ரோகிணி விரதம்  
ஜூன் 29, புதன்கிழமை ஆனி  மாத அமாவாசை அனுசரிக்கப்படும்
ஜூன் 30, வியாழன் ஆஷாட நவராத்திரி மற்றும் ஆஷாட சுக்ல பக்ஷம் தொடக்கம்


மேலும் படிக்க | ஏழரை சனியிலும் சனிபகவானின் அருளை பெற ‘இவற்றை’ செய்யுங்கள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR