இந்த வங்கிகளின் கடன் வட்டி உயர்ந்தது, புதிய விகிதம் இதுதான்
பொதுத்துறை வங்கியான பரோடா மற்றும் தனியார் துறை ஐசிஐசிஐ வங்கி கடன் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்ததை அடுத்து, தற்போது வங்கிகள் தங்களின் கடன் விலையை உயர்த்தத் தொடங்கியுள்ளது. அதன்படி பொதுத்துறை வங்கியான பரோடா மற்றும் தனியார் துறை ஐசிஐசிஐ வங்கி கடன் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இதனால் இந்த இரண்டு வங்கிகளிலும் வீடு, வாகனம், தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களும் வாங்குவது இனி சிரமமாகும்.
ரிசர்வ் வங்கி புதன்கிழமை ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. தற்போது 4.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை மனதில் வைத்து பாங்க் ஆப் பரோடா கடன் வட்டி விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. அதன்படி வங்கியின் ரெப்போ-இணைக்கப்பட்ட கடன் விகிதம் இப்போது 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க | வங்கியில் நமது தகவல்கள் திருடப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!
இஎம்ஐ அதிகரிக்கும்
அதேபோல், ஐசிஐசிஐ வங்கியும் வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தில் 40 அடிப்படை புள்ளிகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இது தற்போது 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த கடன் விகித அதிகரிப்பு வங்கியில் இருக்கும் வாடிக்கையாளர்களையும் புதிய வாடிக்கையாளர்களையும் பாதிக்கும். அதன்படி வாடிக்கையாளர்கள் இனி தங்களின் கடனில் அதிக இஎம்ஐ செலுத்த வேண்டி இருக்கும்.
முன்னதாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த நேற்று ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, வட்டி விகிதத்தை அதிகரிக்க அனைத்து வங்கிகளுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற வங்கிகளும் தங்களின் கடன் விலையை உயர்ந்ததாக அறிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ என்பது வணிக வங்கிகளுக்கு தேவைப்படும் போது ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் விகிதமாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி பயன்படுத்தும் ஒரு கருவி இது. ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் இருந்து பெறும் கடன் விகிதமாகும்.
மேலும் படிக்க | FD பற்றிய முக்கிய விதிகளை மாற்றியது RBI: தெரியாமல் போனால் நஷ்டம் உங்களுக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR