உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டதா? புதிய பான் கார்டு பெறுவது எப்படி
பான் கார்டு: பான் கார்டு இல்லாமல் இன்றைய காலகட்டத்தில் எந்த வேலையும் செய்ய முடியாது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டால், தற்போது புதிய பான் கார்டு பெறுவது எப்படி என்று பார்போம்.
புதுடெல்லி: பான் கார்டு முக்கிய ஆவணமாக மாறியுள்ளது. தற்போது அரசு முதல் தனியார் பணி வரை பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கியில் கணக்கு தொடங்க, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு எடுக்க அல்லது ஐடிஆர் தாக்கல் செய்ய அனைத்து இடங்களிலும் பான் கார்டு கட்டாயம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பான் கார்டு எங்காவது தொலைந்துவிட்டால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தற்போது வருமான வரித்துறையின் புதிய இணையதளத்தில் இருந்து உங்கள் இ-பான் கார்டை எளிதாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதன் முழு விவரத்தை தெரிந்துக்கொள்வோம்.
பான் எண்ணுடன் இ-பானை பதிவிறக்கம் செய்வது எப்படி
1. முதலில் வருமான வரி இணையதளமான https://www.incometax.gov.in/iec/foportal இல் உள்நுழையவும்.
2. இப்போது நீங்கள் 'இன்ஸ்டன்ட் இ பான்' என்பதைக் கிளிக் செய்யவும்.
3. அடுத்து, 'நியூ இ பான்' என்பதைக் கிளிக் செய்யவும்.
4. இப்போது உங்கள் பான் எண்ணை உள்ளிடவும்.
5. உங்கள் பான் எண் உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
6. இங்கு பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளன, அவற்றை கவனமாகப் படித்துவிட்டு 'ஏற்றுக்கொள்' என்பதைக் கிளிக் செய்யவும்.
7. இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி வரும், அதை எழுதவும்.
8. இப்போது கொடுக்கப்பட்ட விவரங்களைப் படித்த பிறகு, 'உறுதிப்படுத்தவும்'.
10. இப்போது உங்கள் பான் உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு பிடிஎஃப் வடிவத்தில் அனுப்பப்படும்.
11. இங்கிருந்து உங்கள் 'இ-பான்' பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் படிக்க | சிறிய தவறு பெரிய இழப்பு.. இந்த 4 ஷயங்களை மனதில் கொள்ளுங்கள்
பான்-ஆதார் இணைப்பு கட்டாயம்
உங்கள் ஆதார் அட்டையின் உதவியுடன் இ-பான் கார்டைப் பதிவிறக்கலாம். ஆனால் இதற்கு உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பு இருப்பது கட்டாயம். உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், உங்களால் இ-பான் எண்ணைப் பதிவிறக்க முடியாது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR