LPG Cylinder: LPG சிலிண்டர் விலை குறைஞ்சாச்சு; முதல் நாளே மக்கள் குஷி
LPG Cylinder Price: எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று அதிரடியாக ரூ.187 குறைக்கப்பட்டது.
எல்பிஜி சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 1) சிலிண்டரின் விலையைப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன. அதன்படி இன்று 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான விலை 187 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய விலை மாற்றத்தின் படி, டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.2021 ஆக உள்ளது. இதற்கு முன்னர் அங்கு சிலிண்டரின் விலை ரூ.2219 ஆக இருந்தது. அதேபோல, மும்பையில் சிலிண்டரின் விலை ரூ.2,116.5லிருந்து ரூ.2,307 ஆகக் குறைந்துள்ளது. கொல்கத்தாவில் சிலிண்டர் விலை ரூ.2,140 ஆக இருக்கிறது.
மேலும் படிக்க |IBPS Clerk 2022 ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது
சென்னையைப் பொறுத்தவரையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் இன்று 2,186 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரின் விலை டெல்லியில் 1,003 ஆக உள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கியவர்களுக்கு மானியமாக 200 ரூபாய் கிடைக்கும். இதன்படிப் பார்த்தால் அவர்கள் சிலிண்டருக்கு 803 ரூபாய் மட்டுமே செலவு செய்ய வேண்டியிருக்கும்.
முன்னதாக கொரோனா பிரச்சினையைக் கருத்தில் கொண்டு 2020 ஜூன் மாதம் முதலே நிறையப் பேருக்கு சிலிண்டர் மானியம் வரவில்லை. சிலிண்டரின் முழு விலையையும் கொடுத்தே வாங்க வேண்டியிருந்தது. இந்நிலையில் தற்போது சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், மாதத்தின் மத்தியில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகர வாரியாக 14.2 கிலோ சிலிண்டர் விலை ரூபாயில்
டெல்லி 1,003
மும்பை 1,003
கொல்கத்தா 1,029
சென்னை 1,019
லக்னோ 1,041
ஜெய்ப்பூர் 1,007
பாட்னா 1,093
இந்தூர் 1,031
அகமதாபாத் 1,010
புனே 1,006
கோரக்பூர் 1012
போபால் 1009
ஆக்ரா 1016
ராஞ்சி 1061
எல்பிஜி கேஸ் விலை (ரூ./19 கிலோ சிலிண்டர்)
மாதம் டெல்லி
1 ஜூலை 2022 2021
1 ஜூன் 2022 2219
19 மே 2022 2354
7 மே 2022 2346
1 மே 2022 2355.5
1 ஏப்ரல் 2022 2253
22 மார்ச் 2022 2003
மார்ச் 1, 2022 2012
மேலும் படிக்க | Best SIP: பம்பர் வருமானம் பெற இந்த 3 எஸ்ஐபி-களில் முதலீடு செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR