ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. இதன்படி சில ராசி பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இவர்களது அதிர்ஷ்டத்தின் விளைவால், இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதோடு மட்டுமல்லாமல், இவர்களை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் இருப்பார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக, தந்தைகளுக்கு பெண் குழந்தைகள் மீது அன்பு அதிகமாக இருக்கும். பெண் குழந்தைகளும் தந்தைகளிடம் பெரும் அன்பை கொண்டிருப்பார்கள். அந்த வகையில், ராசிகளின் அடிப்படையில் மிகவும் அதிர்ஷ்டக்கார மகள்களாக இருக்கும் ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் காணலாம். 


ரிஷபம் 
ஜோதிடத்தின் படி, ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் புத்திசாலிகள், கடின உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நோக்கி நகர முயல்வார்கள். இதன் காரணமாக, அவர்கள் வேகமாக முன்னேறுகிறார்கள். 


இந்த பெண்கள் தந்தை மற்றும் குடும்பத்தின் பெயரை கவுரவப்படுத்துவார்கள். இவர்களது தந்தை அதிர்ஷ்டசாலியாக இருப்பதோடு, இவர்களது கணவரும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். இவர்களது அதிர்ஷ்டத்தால், இவர்களது தந்தையும் அவரது பணியிலும், தொழிலிலும் பல வெற்றிகளைப் பெறுகிறார்.


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 


கடகம்


கடக ராசிப்பெண்கள் தங்கள் தந்தை மற்றும் குடும்பத்திற்கு மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். குடும்பத்தின் நிதி நிலையில் இவர்கள் பிறப்புக்குப் பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் வருமானம் உயரத் தொடங்கும். இது தவிர, இந்த பெண்களும் மிகவும் திறமையானவர்களாகவும் இருப்பார்கள். சிறு வயது முதலே பல வெற்றிகளை பெறுவார்கள். 


துலாம் 


துலா ராசி பெண்கள் மிகவும் புத்திசாலிகள். இவர்கள் சீரான இயல்புடையவர்கள். இந்த பெண்கள் திறமையானவர்களாக இருப்பதோடு, தங்கள் இலக்கை அடைய வெகுவாக உழைப்பார்கள். எதைச் செய்ய முடிவு செய்தாலும், அதைச் செய்து முடித்த பின்னரே நிம்மதி அடைவார்கள்.  இவர்களுடைய இயல்பும், ஆளுமையும் மக்களை எளிதில் ஈர்க்கும். துலா ராசிப்பெண்கள் தந்தை மற்றும் குடும்பத்திற்கு மரியாதை தருபவர்கள். 


மகரம் 


சனியின் செல்வாக்கின் காரணமாக, மகர ராசி பெண்கள் கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் மற்றும் மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தை மட்டுமல்ல, மற்றவர்களையும் கவனித்துக்கொள்கிறார்கள். இவர்களுடைய இயல்பினால் அனைவருக்கும் இவர்களை பிடித்துவிடும். 


தந்தையிடம் தணியாத அன்பு கொண்டிருக்கும் மகர ராசிப்பெண்கள், தங்கள் வாழ்க்கையில், தங்கள் செயல்களால் தந்தைக்கு நல்ல பெயரை பெற்று தருவார்கள். தங்கள் இலக்கை அடைவதில் இவர்கள் எப்போதும் குறியாக இருப்பார்கள். 


கன்னி


கன்னி ராசி பெண்கள் மிகவும் படைப்பாற்றல் மிக்கவர்கள். சிறுவயதிலிருந்தே தங்கள் திறமையால் பெயர் வாங்கத் தொடங்குகிறார்கள். இவர்களது அதிர்ஷ்டத்தின் பலன் இவர்களது தந்தைக்கும் கிடைக்கும். கன்னி ராசிப்பெண்களின் அதிர்ஷ்டத்தால், தந்தையின் பணியில் ஆதாயம், வருமானம், கௌரவம் என அனைத்தும் உயரும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களின் நல்ல நாட்கள் ஏப்ரல் 27 முதல் தொடங்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR