சுக்கிரன் பெயர்ச்சி: காதல், வேலை, வியாபாரம் என அனைத்திலும் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

Venus Transit: 3 ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றத்தின் பலன் மிகவும் சுபமாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 22, 2022, 05:38 PM IST
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் அற்புதமான நாட்களைக் கொண்டுவரும்.
  • கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் அதிர்ஷ்டமாக அமையும்.
  • அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.
சுக்கிரன் பெயர்ச்சி: காதல், வேலை, வியாபாரம் என அனைத்திலும் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்  title=

சுக்கிரன் ராசி மாற்றம் ஏப்ரல் 2022: அன்பு, பாசம், காதல், மகிழ்ச்சி, அழகு ஆகியவற்றின் காரணியாக சுக்கிர கிரகம் உள்ளது. சுக்கிரம் தனது ராசியை மாற்றும்போதெல்லாம், அது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் பல வித தாக்கங்களை ஏற்படுத்தும். 

சுக்கிரனின் ராசி மாற்றத்தால், சிலருக்கு நல்ல பலன்களும் சிலருக்கு தீய பலன்களும் ஏற்படும். ஏப்ரல் 27, 2022 அன்று, சுக்கிரன் தனது ராசியை மாற்றப் போகிறது. அதன் தாக்கம் வெவ்வேறு ராசிக்காரர்களுக்கு வெவ்வேறு விதமாக இருக்கும். 

எனினும், 3 ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றத்தின் பலன் மிகவும் சுபமாக இருக்கும். இவர்கள் வாழ்வில் காதல் மலரலாம், திருமணம் நடக்கலாம், பணம் சேரலாம். அத்தகைய அதிர்ஷ்டக்கார ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

தற்போது சுக்கிரன் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். அவர் 27 ஏப்ரல் 2022 அன்று மீன ராசியில் பிரவேசிப்பார். மாலை 06:06 மணிக்கு சுக்கிரனின் பெயர்ச்சி நிகழும். இந்த பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அவர்களின் வாழ்க்கையில் அளவுகடந்த மகிழ்ச்சி பொங்கும். 

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் அற்புதமான நாட்களைக் கொண்டுவரும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். தடைப்பட்ட பணம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி 2022: ஏப்ரல் 29 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும் 

இது தவிர, இந்த நேரம் வேலை மற்றும் வணிகத்திற்கும் மிகவும் சிறப்பாக இருக்கும். விரும்பிய வேலையைப் பெறலாம். பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் உறவு சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் பல வரங்களைத் தரும். இந்த நேரம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் மரியாதை கூடும். பதவி உயர்வு பெறலாம். முன்பு செய்த கடின உழைப்பின் பலனை தற்போது விருது வடிவில் பெறுவீர்கள். 

வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் நல்ல பலனைத் தரும். வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும், துணையுடன் உறவு சிறப்பாக இருக்கும்.

கடகம்: 
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் அதிர்ஷ்டமாக அமையும். அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். பணிபுரியும் இடத்தில் நல்ல சூழ்நிலை இருக்கும். பதவி உயர்வு அல்லது ஏதேனும் விருது கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கலாம். 

சொத்து, கார் வாங்கும் யோகம் உருவாகும். வாழ்க்கையில் சௌகரியங்களும் வசதிகளும் அதிகரிப்பது உங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். தனியாக இருப்பவர்கள் நல்ல துணையை பெறுவார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் இடமாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News