ஆதார் கார்ட் எடுத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதா? உடனே இந்த மாற்றங்களை பண்ணிடுங்க!
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அடையாள அட்டையை பெற்றவர்கள் மற்றும் அடையாள அட்டையை பெற்றதிலிருந்து அப்டேட் செய்யாதவர்களை உடனடியாக அப்டேட் செய்யும்படி யுஐடிஏஐ கூறியுள்ளது.
கடந்த செய்வ்வாய்கிழமையன்று ஆதார் எண்களை வழங்கும் அரசு அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பத்து ஆண்டுகளுக்கு முன்பான ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இன்னும் சில அப்டேட்டுகளை செய்யாமல் வைத்திருக்கின்றனர் என்றும் அதனை கூடிய விரைவில் செய்துமுடிக்கும்படியும் கூறி உள்ளது, இந்த அப்டேட்டில் அடையாள மற்றும் வசிப்பிட ஆதார ஆவணங்களையும் சேர்த்து அப்டேட் செய்ய வேண்டும். இதுபோன்ற அப்டேட்டுகளை ஆன்லைன் வாயிலாகவும் செய்து கொள்ளலாம் என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | SBI Alert: கவனமாக இல்லையென்றால் முழு பணமும் காலி!! SBI விடுத்த எச்சரிக்கை
இதுகுறித்து யுஐடிஏஐ வெளியிட்ட அறிக்கையின்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் ஆதார் அடையாள அட்டையை பெற்றவர்கள் மற்றும் அந்த அடையாள அட்டையை பெற்றதிலிருந்து அதனை அப்டேட் செய்யாதவர்கள் உடனடியாக அப்டேட் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த ஆவணங்களை அப்டேட் செய்வது கட்டாயமான ஒன்றா என்பது பற்றி யுஐடிஏஐ கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடையாள ஆவணம் மற்றும் வசிப்பிடச் சான்று ஆகியவற்றை அப்டேட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம், இதனை செய்ய ஆதார் போர்ட்டல் அல்லது அருகிலுள்ள ஆதார் மையத்தில் செய்து கொள்ளலாம் என்றும் யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.
அரசாங்கம் வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளவும், அடையாளம் காணுதல் அல்லது சான்றிதழ் வழங்குவதில் ஏதேனும் சிக்கல்களைத் தடுப்பதற்கும் மக்கள் தங்கள் ஆதார் தகவல்களைப் அப்டேட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆதார் அடையாளங்களுக்கு உங்களது கருவிழி, கைரேகை மற்றும் புகைப்படங்கள் முக்கியம், ஆதார் எண் அல்லது பதிவுச் சீட்டு இல்லாதவர்கள் அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற முடியாது என்று கடந்த ஆகஸ்ட் மாதம் யுஐடிஏஐ அறிவித்திருந்தது.
மேலும் படிக்க | Mutual Fund:மியூசுவல் ஃபண்டுகளை எப்போது ரிடீம் செய்ய வேண்டும்? எப்படி செய்வது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ