என்னாது ஒரு பீரின் விலை ₹ 48 லட்சமா... கிறுகிறுத்துப்போன கிரிக்கெட் செய்தியாளர்!
ஆஸ்திரேலியர் ஒருவர் இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் ஒரே ஒரு பீர் குடித்து விட்டு, அதற்கு 48 லட்சம் ரூபாய் பில் கட்டி இருக்கிறார்!!
ஆஸ்திரேலியர் ஒருவர் இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் ஒரே ஒரு பீர் குடித்து விட்டு, அதற்கு 48 லட்சம் ரூபாய் பில் கட்டி இருக்கிறார்!!
பீரைக் குடித்து போதை ஆவதற்குப் பதிலாக அதத பீருக்கு போடப்பட்ட பில்லைப் பார்த்து மயங்கி விழுந்துள்ளார் ஒருவர். ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பிரபல செய்தியாளர் பீட்டர் லலோர், ஆஷஸ் கிரி்க்கெட் தொடர் குறித்த செய்திகளை பதிவு செய்ய இங்கிலாந்து சென்றுள்ளார். அப்போது மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சென்று பீர் அருந்தியுள்ளார் பீட்டர். பீரை அருந்தி முடித்ததும் அவருக்கு அதற்கான பில் வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர் அருந்திய பீரின் விலை இந்திய மதிப்பில் 48 லட்ச ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. தனது டெபிட் கார்ட் மூலம் பணத்தை கட்டிய பிறகு பில்லை பார்த்த அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது.
பின்னர் ரிசப்ஷனுக்கு திரும்பிய பீடர் தனக்கு நேர்ந்த தவறுக்குப் புகார் கொடுக்கவே தவறாக பில் கொடுத்ததற்கு ஹோட்டல் நிர்வாகம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது. எனினும், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 55,000 பவுண்டுகள் எடுக்கப்பட்டுவிட்டது. கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை மீண்டும் அவருக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து லாலோர் தனது டுவிட்டர் பக்கத்தில் பீர் பாட்டிலின் படத்தைப் பகிர்ந்து, “இந்த பீரை பார்க்கிறீர்களா? இது வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த பீர் ஆகும். மான்செஸ்டரில் உள்ள மால்மைசன் ஹோட்டலில் 99,983.64 டாலர் செலுத்தினேன். உண்மையாகத்தான்” என்று பதிவிட்டுள்ளார்.