IRCTC செயலில் அதிக அளவு ஆபாச விளம்பரங்கள் வருவதாக புகார் அளித்த நபருக்கு, அவரே வியந்து போகும் அளவிற்கு IRCTC பதிலடி கொடுத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IRCTC செயலியை பயன்படுத்தும் ஆனந்த் குமார் என்பவர், IRCTC-யின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை டேக் செய்து ஒரு புகாரை பதிவிட்டு இருந்தார்.


அந்த புகாரில் IRCTC செயலியில் பல ஆபாசமான விளம்பரங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. இது மிகவும் அவமானமாகவும் கடுப்பேற்றும் வகையிலும் உள்ளது. இது என்னவென்று பார்த்து நடவடிக்கை எடுக்கவும் என்று ஆனந்த் குமார் தனது செயலியில் வந்த விளம்பரப் படங்களுடன் பதிவிட்டிருந்தார்.




இதையடுத்து IRCTC தரப்பு, ஆனந்த குமாரை டேக் செய்து, “நாங்கள் கூகுள் நிறுவனத்தில் விளம்பர சேவை டூல் ஆன ஏ.டி.எக்ஸை பயன்படுத்துகிறோம். இணையத்தில் நீங்கள் தேடும் விஷயங்களை வைத்து இந்த விளம்பரங்கள் எங்கள் செயலியில் வரும். எனவே, இதைப் போன்ற விளம்பரங்கள் வராமல் இருக்க உங்கள் இணைய குக்கீஸ் மற்றும் இணைய வரலாற்றை முழுவதுமாக நீக்கவிடவும் என கேலி செய்யும் விதத்தில் பதில் அளித்திருந்தது.


IRCTC-ன் இந்த பதிலடியைத் தொடர்ந்து, பலரும் புகார் தெரிவித்த பயனரை ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தற்போது IRCTC தக்க ஆதாரங்கள் இல்லாமல் முறையான பதில் அளிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கின்றது. இந்த புகாருக்கான விளக்கத்தினை தெளிவாக அளிக்க வேண்டும் என ஆனந்த் குமார் மீண்டும் IRCTC-க்கு விளக்கம் கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.