ஓய்வுக்கு பிறகு இனி டென்ஷன் இல்லை லாட்டரி தான்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
Senior Citizen Savings Scheme: ஓய்வு பெற்றப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு பல நலத் திட்டங்களைத் தற்போது வழங்கி வருகிறது. அதன் மூலம் நாம் நமது எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: நாம் அனைவரும் இதுபோன்ற பல திட்டங்களில் முதலீடு செய்ய முயல்கிறோம், இதன்மூலம் ஓய்வுப் பெற்றப் பிறகு நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். அரசும் இதற்காக பல திட்டங்களை தற்போது அவ்வப்போது கொண்டு வருகிறது. இருப்பினும், சரியான தகவல் இல்லாததால், இந்த திட்டங்களை (Savings Scheme) பலரால் பயன்படுத்த முடியவில்லை. எனவே, எதிர்காலத்தில் உங்களுக்கு லாபகரமான ஒப்பந்தமாக இருக்கும் ஒரு திட்டத்தைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம். மேலும் இது மற்ற பல திட்டங்களை விட இந்த திட்டத்தில் அதிக வருமானம் பெறலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்:
நாம் தற்போது காண உள்ள திட்டம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகும். சமீப காலமாக நாம் திட்டங்களை எடுத்தாலும் அதில் அதிக லாபம் பெற முடியாமல் போவதை பார்க்கிறோம். இதன் மூலம் அதிக பலன்களைப் பெற முடியாமல் போகலாம். ஆனால் தற்போது மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) நீங்கள் 8.2 சதவீதம் வருமானத்தை பெறுவீர்கள். அதாவது ஓய்வு பெற்ற பிறகும் இந்த திட்டத்தில் வங்கியில் இருந்து அதிக வருமானம் பெறலாம். மேலும் ஒவ்வொரு காலாண்டிலும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் (Senior Citizens) திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் திருத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அரசின் இந்த திட்டங்களில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும்!
இந்தத் திட்டத்தில் யார் - யார் முதலீடு செய்யலாம்:
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், எந்தவொரு குடிமகனும் VRS எடுத்திருந்தால், அவர் இந்த திட்டத்தை ரூ 1000 உடன் தொடங்கலாம். அதாவது, இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள பெரிய தொகை எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்:
இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (Senior Citizen Savings Scheme) ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முன்னதாக இதன் வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. நீங்கள் கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திட்டம் முதிர்ச்சியடையும் அல்லது மெச்சூரிட்டி அடையும். அதாவது 5 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை எடுக்கலாம். வட்டி பற்றி பேசுகையில், காலாண்டு அடிப்படையில் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் எப்படி சேர்வது?
அருகில் உள்ள வங்கிக் கிளை அல்லது தபால் நிலையத்தில் இந்தக் கணக்கைத் தொடங்க முடியும். நேரில் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து திட்டத்தில் சேரலாம். பான் எண், புகைப்படங்கள், முகவரி ஆவணம் ஆகியவை அவசியம். வாரிசுதாரரை நியமிக்கும் வசதியும் இந்தத் திட்டத்தில் இருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கு குறைவாக முதலீடு செய்ய விரும்புவோர் ரொக்கமாகவே டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் இருந்தால் காசோலை மூலமாகவே கணக்கைத் தொடங்க முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் பலன்கள் என்னென்ன?
மற்ற நிரந்தர வைப்பு நிதிகள், சேமிப்புத் திட்டங்களைக் காட்டிலும் வட்டி விகிதம் இதற்கு அதிகம். இதன் சேமிப்புக் காலம் 5 ஆண்டுகள் என்றாலும் கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு காலத்தை நீட்டிக்க முடியும். ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை தொடங்க முடியும். கூட்டுக் கணக்கும் தொடங்கலாம்.
மேலும் படிக்க | பான் கார்டு இல்லையா? கவலை வேண்டாம்! எளிதாக E-Pan கார்ட் பெறலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ