இந்தியன் ரயில்வே: அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். ரயில் பயணம் மற்றும் டிக்கெட் ஒதுக்கீடு குறித்த முக்கிய அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் பெட்டியின் கீழ் பெர்த்தை ரயில்வே ஒதுக்கியுள்ளது. அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லோயர் பர்த்


தினமும் லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தங்களுக்குப் பிடித்த இருக்கையைப் பெற, ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்குகிறார்கள். பெரும்பாலான மக்கள் விரும்பும் இருக்கை லோயர் பெர்த் அல்லது சைட் லோயர் பெர்த். ஆனால் இப்போது சாதாரண பயணிகளால் இந்த இருக்கையை பதிவு செய்ய முடியாமல் போகலாம். ஆம், இதற்கான உத்தரவை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள உத்தரவின்படி, ரயிலின் கீழ் பெர்த் சில வகை மக்களுக்கு ஒதுக்கப்படும். ரயில்களில் லோயர் பர்த்கள் யாருக்கு கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். 


மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றோர்


மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்களுக்காக இரயிலின் கீழ் பெர்த்தை ரயில்வே ஒதுக்கியுள்ளது. அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.


மேலும் படிக்க | Indian Railways பயணிகளுக்கு பம்பர் செய்தி: வெறும் ரூ.20 -இல் ஃபுல் மீல்ஸ்


இருக்கை விநியோகம் இப்படி இருக்கும்


ரயில்வே வாரியத்தின் உத்தரவின்படி, ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு இருக்கைகள், அதாவது 2 கீழ் இருக்கைகள் 2 நடு இருக்கைகள், மூன்றாவது வகுப்பு ஏசியில் (தர்ட் ஏசி) இரண்டு இருக்கைகள், ஏசி3 எகானமியில் இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றோரும் அவருடன் பயணம் செய்பவர்களும்  இவற்றில் அமரலாம்.


அதே நேரத்தில், கரீப் ரத் ரயிலில் 2 கீழ் இருக்கைகளும் (லோயர் பர்த்), 2 மேல் இருக்கைகளும் (அப்பர்) மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளுக்கு அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.


ரயில்வே மூத்த குடிமக்களுக்கு தானாகவே கீழ் சீட்டை கொடுக்கும்


இவை தவிர, மூத்த குடிமக்களுக்கு அதாவது பெரியவர்களுக்கு அதற்காக தனியாக கோராமலேயே இந்திய ரயில்வே லோயர் பெர்த்தை தருகிறது. ஸ்லீப்பர் வகுப்பில் 6 முதல் 7 கீழ் பெர்த்கள், ஒவ்வொரு மூன்றாவது ஏசி கோச்சில் 4-5 கீழ் பெர்த்கள், ஒவ்வொரு இரண்டாவது ஏசி பெட்டியிலும் 3-4 லோயர் பெர்த்கள் ஆகியவை 45 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் ரயிலில் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் இதற்கான விருப்பத்தை (ஆப்ஷன்) தேர்ந்தெடுக்காமலேயே இந்த பர்துகளை பெற முடியும். 


மறுபுறம், ஒரு மூத்த குடிமகன், மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றோர் அல்லது கர்ப்பிணிப் பெண்ணுக்கு மேல் இருக்கையில் டிக்கெட் முன்பதிவு கொடுக்கப்பட்டால், ஆன்போர்டு டிக்கெட் சோதனையின் போது TT அவர்களுக்கு கீழ் இருக்கை வழங்குவதற்கான ஏற்பாடும் உள்ளது.


கூடுதல் தகவல்


ரயில் பயணம் மகிழ்ச்சியானதாக, நிம்மதி அளிக்கக்கூடியதாக இருந்தாலும் அதில் நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களும் உள்ளன. இவற்றை பற்றிய புரிதல் அனைத்து பயணிகளுக்கும் இருக்க வேண்டும். இல்லையென்றால், கடுமையான அபராதத்துடன் சிறைத் தண்டனையையும் சந்திக்க வேண்டியிருக்கலாம். ரயிலில் பயணம் செய்யும் போது தவிர்க்க வேண்டிய 4 முக்கிய விஷயங்களைப் பற்றி காணலாம். 


- ரயில் மேல் அமர்ந்து பயணம் செய்யக்கூடாது.
- தேவையில்லாமல் அலாரம் செயினை இழுக்கக்கூடாது.
- ரயிலில் பேனர், போஸ்டர் ஒட்டக்கூடாது.
- குப்பை போட்டால் சிறை


மேலும் படிக்க | இன்று வரை ரயிலையே பார்த்ததில்லை... ரயில் போக்குவரத்து இல்லாத ‘27’ நாடுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ