Mens beauty tips : பெண்களைப் போல் ஆண்கள் தங்களின் சுய அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றாலும், அவர்களும் நடிகர்கள் போல் ஜொலிக்க முடியும். அதற்கு கிரீம்கள், சன்ஸ்கிரீம்கள் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. சில அடிப்படையான விஷயங்களை தினசரி பின்பற்றினாலே போதும். ஆண்களின் முகமும் பளபளப்பாகவும், அழகாகவும் ஜொலிக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சல்மான் கான் போல் அழகாக இருக்க என்ன செய்ய வேண்டும்?


தூக்கம்


அழகாக இருப்பதற்கும் தூக்கத்துக்கும் என்ன சம்பந்தம் என நினைத்துவிடாதீர்கள். நல்ல தூக்கம் இருந்தால் தான் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இரவில் சீக்கிரம் தூங்கச் சென்று, அதிகாலையில் சீக்கிரம் எழ வேண்டும். காலை எழுந்ததும் காலைகடன்களை முடித்துவிட வேண்டும். இவையெல்லாம் உங்களின் மூளையை சுறுசுறுப்பாக இருக்க உதவுதுடன், ஆரோக்கியத்தை மேம்படச் செய்யும்.


மேலும் படிக்க | முகத்தில் அதிக எண்ணெய் உள்ளதா? இந்த வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்யலாம்!


உடற்பயிற்சி


நல்ல தூக்கம் எடுத்த பின்னர் காலையில் குறைந்தபட்சம் ஒருமணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சோம்பேறித் தனம் அறவே கூடாது. தினசரி உடற்பயிற்சி செய்வதில் எந்த சுணக்கமும் காட்டக்கூடாது. உடற்பயிற்சி செய்யும்போது தோலில் இருக்கும் இறந்த செல்கள் எல்லாம் வெளியேறி புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். அதனால் தோல் பளபளப்பாக இருப்பதுடன் நீங்கள் ஆக்டிவாக இருப்பதையும் உங்கள் முகத்தின் பளபளப்பு காட்டிக் கொடுத்துவிடும்.


டையட்


நீங்கள் பளபளப்பாக இருக்க வேண்டும் நினைத்தால் கண்டிப்பாக உணவில் கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள் நிறைந்த உணவை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கீரைகள், பழங்கள் தினசரி சரிவிகித உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் எண்ணெய் உணவுகள் அறவே கூடாது. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்குத் தீனிகளை எல்லாம் நீங்கள் எடுத்துக் கொள்ளவே வேண்டாம். இவை உடலில் மந்தத்தை ஏற்படுத்தி தோலின் பளபளப்பையும் கெடுத்துவிடும். 


குடல் ஆரோக்கியம்


செரிமான பிரச்சனைகள் ஏதும் இல்லாத வரை உங்கள் தோல் பளபளப்பாக இருக்கும். குடல் ஆரோக்கியம் கெட்டாலே தோல் பிரச்சனைகள் வந்துவிடும். தோல் சார்ந்த எந்த பிரச்சனைகள் வந்தாலும் குடல் ஆரோக்கியம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு டையட்டில் உடனடி மாற்றங்களை செய்யுங்கள். இதில் கவனம் கொள்ளவில்லை என்றால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் கெட்டுப்போகும். 


முன்கூட்டியே முதுமை


உடலில் கெட்ட கொழுப்புகள் சேர சேர வயதான தோற்றத்தை துரிதப்படுத்தும். அதனால் முடி நரைத்தல், தோல் சுருங்குதல் உள்ளிட்ட பிரச்சனைகள் எல்லாம் சந்திப்பீர்கள். உங்களை நீங்கள் இளமையாக வைத்திருக்க கெட்ட கொழுப்பு சேருவதை கட்டாயம் தடுக்க வேண்டும். இவையெல்லாம் நீங்கள் செய்தால் இயற்கையாகவே அழகாகவும், இளமையாகவும் இருப்பீர்கள்.


மேலும் படிக்க | 10 வயதிற்குள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ