10 வயதிற்குள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

10 Things Kids Must Learn Before 10 : உங்கள் குழந்தைகள், 10 வயது ஆவதற்கு முன்னர், ‘இந்த’ முக்கியமான 10 விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அவை என்ன தெரியுமா? 

10 Things Kids Must Learn Before 10 : குழந்தைகள்தான், அடுத்த சமுதாயத்தினராக வளர்ந்து வருவர். கடந்த தலைமுறையை சேர்ந்த பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை அடித்து, துன்புருத்தி வளர்த்தனர். இந்த தலைமுறை பெற்றோர்களுக்கு தனது குழந்தைக்கு எதை கொடுக்க வேண்டும், எதை கொடுக்க கூடாது என்பது தெரிந்திருக்கிறது. இருப்பினும், பல சமயங்களில் நமக்கு குழந்தைகளுக்கு எதை கற்றுக்கொடுக்க வேண்டும், எதை கற்றுக்கொடுக்க கூடாது என்பது தெரியவில்லை. எனவே, உங்கள் குழந்தைக்கு 10 வயதாகும் முன்பு அவர்கள் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் குறித்து இங்கு காண்போம். 

1 /10

சமையல் கலையில் நிபுணராகும் அளவிற்கு உங்கள் குழந்தையை ட்ரெயின் செய்ய வேண்டாம். ஆனால், அவர்களுக்கு அடிப்படை சமையலை 10 வயதிற்குள் கற்றுக்கொடுப்பது நல்லதாகும். இது, அவர்களை அவர்களே பார்த்துக்கொள்ள ஆயத்தப்படுத்தும். இதற்கு, நீங்கள் சமைக்கும் போது அவர்களை அருகில் அமர்த்திக்கொண்டு உங்களுடன் சமையலில் ஆரம்பத்தில் இருந்தே ஈடுபட செய்யலாம். 

2 /10

குழந்தைகளுக்கு அடிபடுவது சகஜம். இது குறித்து அவர்களுக்கு புரிய வைத்து, அவர்களின் காயங்களுக்கு அவர்களே மருந்திட சொல்லிக்கொடுக்க வேண்டும். 

3 /10

ஷாப்பிங் செய்வது பலருக்கு அலாதி பிரியம். ஆனால், பட்ஜெட் ஷாப்பிங் எப்படி செய்ய வேண்டும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. எனவே, பட்ஜெட் ஷாப்பிங் குறித்து, பொருட்களை ஒன்றுக்கு இரண்டு கடைகளில் ஒப்பிட்டு பார்த்து வாங்குவது குறித்தும் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 

4 /10

மரம் நடுதல், செடி வளர்த்தல் போன்ற பழக்கங்கள் குறைந்து கொண்டே போகிறது. எனவே, இந்த பழக்கத்தையும் குழந்தைக்கு கற்றுக்கொடுத்தால் அவர்கள் மட்டுமல்லாது அவர்களின் அடுத்த தலைமுறையும் பயனடையும். 

5 /10

டிஜிட்டல் சாதன உபயோகங்கள் இப்போது சகஜமாகி விட்டது. எனவே, உங்கள் குழந்தை பாதுகாப்பாக எப்படி மொபைலை உபயோகிக்க வேண்டும் என்பது குறித்து கற்றுக்கொடுக்க வேண்டும், 

6 /10

கடிதம் எழுதுதல், ஒரு கலை. அதை, இளம் வயதில் இருந்தே குழந்தைக்கு கற்றுக்கொடுக்கலாம். இது, அவர்களின் ஆழ் மனதில் இருக்கும் ஆச்சரியங்களையும் வெளிப்படுத்த உதவும். 

7 /10

துணி துவைப்பதும், அத்தியாவசிய வேலைகளில் ஒன்றாகும். எனவே, அதையும் உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள். துணி துவைத்தல் மட்டுமன்றி, துணி துவைப்பது எப்படி என்றும் கற்றுக்கொடுங்கள். 

8 /10

மனிதர்களாகிய நாம், ஒருவருக்கொருவர் கண்டிப்பாக உதவி செய்துகொள்ள வேண்டும். எனவே, உங்கள் குழந்தைக்கும் பிறருக்கு எப்படி உதவ வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். 

9 /10

ஒருவருக்கு பரிசு கொடுப்பதில் இன்னொருவருக்கு அலாதி பிரியம் இருக்கும். குழந்தைகளுக்கு ஒரு பரிசு பொருளை எப்படி பேக்கிங் செய்ய வேண்டும் என்று கற்பியுங்கள். 

10 /10

புரிந்துணர்வு தன்மை இருந்தால் மட்டுமே, ஒருவரால் இன்னொருவருக்கு எந்த துன்பமும் நேராமல் இருக்கும். உங்கள் குழந்தை சிறு வயதிலேயே அதை கற்றுக்கொண்டால் பின்னாளில் நல்ல மனிதராக வளரலாம்,