முகத்தில் அதிக எண்ணெய் உள்ளதா? இந்த வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்யலாம்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் உள்ளது. இதில் எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமம் கொண்டவர்கள் சில தோல் பராமரிப்புக்களை செய்ய வேண்டும்.

 

1 /6

முறையான தோல் பராமரிப்பு மற்றும் உங்கள் தோலுக்கு ஏற்ற தயாரிப்புகளை பயன்படுத்துவதன் மூலம், அதிக எண்ணெய் பசை கொண்ட சருமத்தை சரி செய்யலாம். இதன் மூலம் முகப்பருவும் குறையும்.  

2 /6

உங்கள் சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை நீக்காமல், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை போக்க தினசரி வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவலாம்.  

3 /6

காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் முகத்தை நல்ல பேஷ் வாஷ் கொண்டு கழுவவும். இதன் மூலம் முகம் புத்துணர்ச்சியாகவும், சுத்தமாகவும் இருக்கும்.  

4 /6

பெண்கள் இரவு தூங்கும் முன்பு கண்டிப்பாக மேக்கப்பை நீக்க வேண்டும். இல்லை என்றால் வெடிப்பு மற்றும் கட்டி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே தூங்கும் முன்பு இதனை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.   

5 /6

தோலில் உள்ள இறந்த சரும செல்களை அகற்ற, வாரம் ஒரு முறை முகத்திற்கு ஸ்க்ரப் பயன்படுத்தவும். இதன் மூலம் தோலில் ஏற்படும் எரிச்சல்கள் குறையும்.  

6 /6

முல்தானி மிட்டி ஃபேஸ் பேக் எண்ணெய் சருமத்திற்கு அதிகம் உதவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை முகத்திற்கு தடவி வந்தால் பளிச்சென்ற முகத்தை பெறலாம்.