Ajwain benefits for hair : ஓமம் என்பது இந்திய சமையலறையில் எளிதாக கிடைக்கக்கூடிய மசாலாப் பொருளாகும். இது உங்கள் உணவை சுவையாகுவதுடன், வயிற்றை வலுவாக்க உதவும். ஏனெனில் ஓமம் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது, அதுமட்டுமின்றி உங்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இது உதவுகிறது. ஆனால், இந்த சின்ன சைஸ் ஓமம் உங்கள் அழகையும் (முடி பராமரிப்பு குறிப்புகள்) மேம்படுத்த உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமா, ஓமம் முடியின் நீளத்தை அதிகரிக்கச் செய்ய உதவும் ஒரு மூலிகை பொருளாகும். எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓம எண்ணெயின் நன்மைகள் என்னென்ன?
ஓம எண்ணெய் முடி உதிர்தல் (Hair Care Tips), பொடுகு மற்றும் கூந்தல் வறட்சியை போக்க உதவும். இந்நிலையில் அதிகளவு பொடுகு உள்ளவர்கள் கட்டாயம் ஓம எண்ணெயை (Health Benefits Of Ajwain) தலைமுடிக்கு தடவ வேண்டும். இது உங்களுக்கு நிவாரணத்தை தரும்.


மேலும் படிக்க | குழந்தைகளை நல்லவர்களாக மாற்றுவது எப்படி? ‘இதை’ சொல்லிக்கொடுங்கள்!


இது தவிர கூந்தலில் ஏற்படும் அரிப்பைக் குறைக்க உதவுகிறது. இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இந்த எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.


ஓம எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்கவும் உதவும். வறண்ட முடி உள்ளவர்களுக்கு இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு வெறும் 15 நாட்கள் முடியில் தடவி வந்தால், முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.


முடிக்கு எப்படி அப்ளை செய்ய வேண்டும்:
ஏதேனும் ஹேர் ஆயிலை எடுத்து அதில் ஓமத்தை போட்டு கொதிக்க விடவும், பின்னர் அதை ஆற வைக்கவும். இப்போது அதை வடிகட்டி உங்கள் தலைமுடியில் மசாஜ் செய்யவும்.


ஓமத்தின் பிற நன்மைகள்:
ஓம உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த உதவும். நீங்கள் தினமும் ஓமத்தை உட்கொண்டால், பசியை அதிகரிக்க உதவும், இதனால் செரிமானத்திற்கு நன்மை பயக்கும். மேலும் கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவும்.


​ஓமத்தில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள்:
ஹெர்பல் பொருட்களில் ஒன்றான ஓமம் தனக்குள்ளே அதிக ஊட்டச்சத்துகளை வைத்துள்ளது. குறிப்பாக, புரோட்டீன், கொழுப்பு, மினரல், ஃபைபர், கார்போஹைட்ரேட், கால்சியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இதில் இடம்பெற்றுள்ளன.


எவ்வித மருந்துகளாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் பாதிப்பு ஏற்படும் அல்லவா? இதுப் போன்று ஓமம் பயன்படுத்தும் போதும். இதில் உள்ள தைமால் என்னும் பொருள் இருப்பதால் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க ஆசையா.. இந்த 5 ஆரோக்கியமான பானங்களை குடிங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ