New Hyundai Creta SX Executive variant launched in India: இந்தியாவின் இரண்டாவது பெரிய வாகன உற்பத்தியாளரான ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) அசத்தலான ஒரு காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகம் விற்பனையான காம்பாக்ட் எஸ்யூவி கிரெட்டாவின் புதிய எஸ்எக்ஸ் எக்ஸிகியூட்டிவ் (SX Executive) டிரிம் ஒன்றை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய எஸ்எக்ஸ் எக்ஸிகியூட்டிவ் டிரிம் ஹூண்டாய் பெட்ரோல் மாடல் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா டீசல் மாடல் ஆகிய இரண்டிற்கும் மானுவல் பரிமாற்றத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் பல அம்சங்களும் அகற்றப்பட்டுள்ளன.


விலை என்ன?


புதிய எஸ்எக்ஸ் எக்ஸிகியூட்டிவ் டிரிமின் 1.5 லிட்டர் பெட்ரோல் (MT) வகையின் விலை ரூ .13.18 லட்சம் மற்றும் 1.5 லிட்டர் டீசல் (MT) வகையின் விலை ரூ .14.18 லட்சம் ஆகும். எஸ்எக்ஸ் டிரிம்முடன் ஒப்பிடுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் கிரெட்டா ஆகிய இரண்டு மாடல்களுக்கும் இது ரூ .78,800 வரை மலிவானது. மிகவும் மலிவு விலையில் வழங்கப்பட்டாலும், கிரெட்டா எஸ்எக்ஸ் வேரியண்ட்டுடன் ஒப்பிடும்போது எஸ்எக்ஸ் எக்ஸிகியூட்டிவ் டிரிமில் பல அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன.


இதன் முக்கிய அம்சங்கள் என்ன


ஹூண்டாய் (Hyundai) அதன் நடுத்தர காம்பாக்ட் எஸ்யூவி கிரெட்டாவின் வகைகளில் ஒன்றன் பின் ஒன்றாக மாற்றங்களைச் செய்து வருகிறது. ஆனால் கிரெட்டாவுக்கான கிரேஸ் இன்னும் வாடிக்கையாளர்களிடையே உள்ளது. மே மாதத்திலும், கிரெட்டாவின் 7,527 யூனிட்டுகள் விற்கப்பட்டன. அதன் பல வகைகளுக்கான காத்திருப்பு காலம் 9 மாதங்கள் வரை உள்ளது. ஏப்ரல் மாதத்தில் தான், நிறுவனம் கிரெட்டாவின் விலையை 20 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது.


ALSO READ: வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க “இவற்றை” இன்றே காரில் இருந்து நீக்கவும்


புதிய மாறுபாட்டில் உள்ள புதிய விஷயங்கள் என்னென்ன? 


Hyundai Creta SX Executive மற்றும் Hyundai Creta SX வகைகளுக்கு இடையிலான வேறுபாடுகளைப் பார்க்கும்போது, ​​புதிய மலிவான டிரிம் வகையில் பல அம்சங்கள் இருக்காது. எடுத்துக்காட்டாக, SX Executive-வில், ப்ளூலிங்க் இணைப்புத் தொகுப்புடன் 10.25 அங்குல தொடுதிரை அமைப்பு ஸ்டேன்டர்ட் வகையில் கிடைப்பதில்லை. இந்த புதிய வகையில் வெளிப்புற குரோம் கதவு கைப்பிடி, Arkamys ஒலி அமைப்பு, குரல் அங்கீகார பொத்தான் போன்ற பல அம்சங்கள் இல்லை. தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட அம்சங்களில் புளூடூத் மைக், ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட ஆடியோ கண்ட்ரோல், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரியர் வியூ கேமரா மற்றும் யூ.எஸ்.பி போர்ட் ஆகியவை கிடைக்கும்.


எஞ்சின் மற்றும் பவர்


ஹூண்டாய் கிரெட்டா எஸ்எக்ஸ் எக்ஸிகியூட்டிவ் டிரிம்மில் ஹூண்டாய் கிரெட்டா வரம்பின் மற்ற வகைகளைப் போலவே அதே எஞ்சின் கிடைக்கிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் (Petrol) எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவரையும், 144 என்எம் உச்ச முறுக்கு சக்தியையும் உருவாக்குகிறது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவரையும் 250 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த இரண்டு என்ஜின் ஆப்ஷன்களுடனும் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் எஸ்யூவி-க்கு நல்ல வரவேற்பு 


ஹூண்டாய் கிரெட்டாவுக்கு இந்தியாவில் மிகப்பெரிய தேவையும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பும் உள்ளது. இந்த காம்பாக்ட் எஸ்யூவியின் (SUV)  6 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்களை இந்தியாவில் இதுவரை வெற்றிகரமாக விற்பனை செய்துள்ளது. சுவாரஸ்யமாக, வாகன உற்பத்தியாளரான ஹுண்டாய், கடந்த ஒரு லட்சம் யூனிட்களை வெறும் எட்டு மாதங்களுக்குள் விற்றுள்ளது. மே மாதத்தில் அதிக விற்பனையுடன் இந்தியாவில் கார் தயாரிப்பாளர்களின் பட்டியலில் ஹூண்டாய் முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் தொற்றுநோயால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாகன சந்தையிலும், ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அதிகம் விற்பனையான காராக முன்னிலையில் உள்ளது.


ALSO READ: சந்தையில் அறிமுகப்படுவதற்கு முன்னரே கசிந்த Hyundai Alcazar காரின் விவரங்கள்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR